அனல் பறக்கும் சண்டை காட்சிகளுடன் வெளியானது விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் டீசர்.!

0

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் அரைச்ச மாவை அரைப்பது போல் ஒரே மாதிரியான திரைப்படங்களை கொடுத்து வருகிறார்கள் அதிலும் ஒரு சில நடிகர்கள் மட்டுமே வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படத்தை கொடுத்து வருகிறார்கள்.

ஆனால் ஒரு சில நடிகர்கள் என்னதான் வித்தியாசமான திரைப்படத்தை கொடுத்தாலும் அது தோல்வியில் முடிவடைகின்றன, இந்த நிலையில் வித்தியாசமான திரைப்படத்தை கொடுத்து வெற்றி பெற்று வருபவர் விஜய் ஆண்டனி.

விஜய் ஆண்டனியின் திரைப்படம் ஓரளவு ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது, அதிலும் ஒருசில திரைப்படம் தோல்வியடைந்தாலும் அடுத்தடுத்து திரைப்படங்களில் தன்னுடைய புதிய முயற்சியால் ஹிட் கொடுத்து விடுகிறார்.

அந்த வகையில் விஜய் ஆண்டனி ஆனந்த் கிருஷ்ணா இயக்கத்தில் கோடியில் ஒருவன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகையாக ஆத்மிகா நடித்துள்ளார்.

கொடியில் ஒருவன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது,  பொதுவாக விஜய் ஆண்டனி திரைப்படம் என்றாலே தலைப்பில் வித்யாசம் இருக்கும் அந்த வகையில் இந்ததிரைப்படத்தின் தலைப்பையும் வித்தியாசமாக வைத்துள்ளார்.

இந்த நிலையில் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது இந்த டீசரில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்துள்ளன அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.