ஆல் ஸ்டார் கிரிக்கெட் போட்டி எங்கு நடைபெறுகிறது தெரியுமா.? என்ன தேதி தெரியுமா.? ரசிகர்கள் கொண்டாட்டம்

வருகின்ற மார்ச் 29ஆம் தேதி ஐபிஎல் தொடங்கவுள்ளது. இப்பொழுதே ரசிகர்கள் ஆரவாரத்தில் உள்ளனர். இந்நிலையில் ஆல் ஸ்டார் கிரிக்கெட் என்ற ஒரு புதிய போட்டியை பிசிசிஐ நிறுவனம் நடத்த உள்ளது. அல் ஸ்டார் கிரிக்கெட் போட்டி வருகின்ற 25 ஆம் தேதி நடைபெற உள்ளது இதில் 8 ஐபிஎல் அணிகள் நான்கு, நான்கு அணிகளாக பிரிக்கப்படுகின்றன.

அதன்படி சென்னை பெங்களூர், ஹைதராபாத், மும்பை ஆகியவை ஒரு அணிகளாக மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிடல், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா ஆகிய ஒரு அணியாகவும் இணைந்து ஸ்டார் கிரிக்கெட் விளையாட உள்ளனர்.

இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியை பார்க்க பிரபலங்கள் மற்றும் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Saurav-BCCI-President
Saurav-BCCI-President

பிசிசிஐ நிறுவனம் ஆல் ஸ்டார் கிரிக்கெட் போட்டியை பகல் இரவு போட்டிகளாக நடத்தவுள்ளது. மேலும் இத் தொடரில் முக்கிய விதிமுறைகள் நோபால் பார்க்க நடுவர் நியமிக்கப்பட்டு உள்ளார்  மற்றும் காயமடைந்தவர்களுக்கு மாற்று வீரர்கள் என புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆல் ஸ்டார் கிரிக்கெட் மார்ச் 25ஆம் தேதி  நடைபெற உள்ளது. இதனை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Comment