இந்தியன் 2 விபத்தில் இறந்தவர்களுக்கு ஷங்கர் மற்றும் கமல் செய்த உதவி எவ்வளவு தெரியுமா.?

முன்னணி நடிகரான கமலை வைத்து  இந்தியன் 2 பாகத்தை எடுத்து கொண்டு இருந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி இரவு ஒரு மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது.இதில் மூன்று உதவி இயக்குனர்கள் சம்வ இடத்தில உயிரிழந்தனர்.மற்றும் பலர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.சென்னை பூந்தமல்லி எடுத்து செம்பரம்பாக்கம் பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் இந்தியன் 2 சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தன. அந்த சண்டைக்காட்சியை பகலில் சண்டைபோடது போல காட்டுவதற்காக வெளிச்சம் காட்டுவதற்காக ராட்ச கிரேன் அங்கு அமைக்கப்பட்டிருந்தது.

சற்றும் எதிர்பாராத விதமாக திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இயக்குனர் ஷங்கரின் உதவியாளரான கிருஷ்ணா, சந்திரன், மதுசூதன ராவ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் இதனால் படக்குழு உருக்குலைந்து போனார்கள்.உயிர் இழந்த 3 பேரின் உடலுக்கு நேரில் சென்று கமல்,பிரியா பவானி சங்கர்,ஷங்கர் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த விபத்தினால் திரையுலகமே சோகத்தில் மூழ்கியது. இந்த விபத்துகான காரணம் சரியான பாதுகாப்பு இல்லாதது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ராட்ச கிரேன் சரியாக  சோதணை செய்யதால் பாரம் தாங்காமல் அருந்தது என சொல்லிவருகின்றனர்.இதன் தொடர்பாக ஆப்பரேட்டர் ராஜன் மற்றும் லைகா நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன்பின் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.இந்தநிலையில் இப்படத்தின் இயக்குனர் சங்கர் மீது 2 மணி நேரம் விச்சரித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

Indian-2-
Indian-2-

இதனை அடுத்து சங்கர் அவர்கள் இந்தியன் 2 படத்தின் விபத்து நடந்தது குறித்து தனது சமுகவலைதளத்தில் உருக்கமான செய்தி ஒன்றை வெளியிட்டு உள்ளார். சமீபத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பில் இறந்து போன கிருஷ்ணா,மது, சந்திரன் ஆகியோர் குடும்பத்தினருக்கு சுமார் 1 கோடி ரூபாயை உதவியாக வழிங்கியுள்ளார் மற்றும் நடிகர் கமல் உயிரிழந்தோர் குடும்பத்திற்க்கு 1 கோடியை கொடுத்துள்ளார் மற்றும் தனது ஆழந்த இரங்களையும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment