இது தோனி ரிவிவ் சிஸ்டம்டா தப்பவே தப்பாது என மீண்டும் நிரூபித்த தோனி.! மைதானமே மிரண்டு போன சம்பவம்…

சிஎஸ்கே அணியும் கேகேஆர் அணியும் கொல்கத்தாவில் நேருக்கு நேராக மோதிக் கொண்டன இது 16வது ஐபிஎல் தொடரில் 33வது லீக் போட்டியாகும் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற கேகேஆர் அணி பவுலிங் தேர்வு செய்தது அதனால் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்தது. சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களான ருத்ராஜ் மற்றும் கான்வே இருவரும் களமிறங்கினார்கள்.

ருத்ராஜ் 20 பாலில் 35 ரன்கள் எடுத்து தன்னுடைய விக்கெட்டை பறி கொடுத்தார் அடுத்ததாக கான்வே 40 பாலில் 56 ரன்கள் எடுத்து தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார், அடுத்ததாக களம் இறங்கிய ரகானே 29 பாலில் 71 ரன்கள் எடுத்து அசத்தினார், இதில் 5 சிக்சர்கள் ஆறு பவுண்டரிகள் அடங்கும். இவர் கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார் இதனைத் தொடர்ந்து சிவம் தூபே 21 பந்துகளில் 50 ரன்கள் எடுத்துக் கொடுத்தார் இதில் 5 சிக்சர்களும் இரண்டு பவுண்டரிகளும் அடங்கும்.

இவர் ஜாஸன் ராய் பாலில் அவுட் ஆனார் இதனைத் தொடர்ந்து அடுத்ததாக களம் இறங்கிய ரவீந்திர ஜடேஜா 8 பாலில் 18 ரன்கள் எடுத்து தன்னுடைய விக்கெட்டை பறி கொடுத்தார். கே கே ஆர் அணியில் வருண் சக்கரவர்த்தி ஒரு விக்கட்டையும், குல்வண்ட் இரண்டு விக்கெட்டையும், ஷர்மா ஒரு விக்கெட்டையும் எடுத்திருந்தார்கள். மொத்தத்தில் 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி 235 ரன்கள் எடுத்திருந்தது.

இதில் தோனி ஜடேஜாவுக்கு பிறகு களம் இறங்கினார் இவர் மூன்று பாலில் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் ஆனால் கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்து வந்தார். இவர் 19 ஆவது ஓவரில் களம் இறங்கினார் அப்பொழுது கடைசி ஓவரில் ஒரு ஃபுல் டாஸ் போடப்பட்டது ஆனால் அந்த பால் வைடு உடனே தோனி ரிவியூ கேட்டார் அப்பொழுது அரங்கத்தில் இருந்து அனைவரும் தோனி ரிவியூ சிஸ்டம் தப்பாவே ஆகாது என அரங்கத்தையே அலற விட்டார்கள்.

பின்பு ரிவ்யூ வந்தது அதேபோல் நோபால் என கூறினார்கள் உடனே அரங்கமே அதிர்ந்தது. இப்படி தோனி ரிவ்யூ கேட்டு தப்பானதாக சரித்திரமே இல்லை என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment