சூப்பர் ஸ்டாரை நேரில் சந்தித்த KKR அணி வீரர்கள்.. இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்

0
KKR
KKR

இந்தியாவில் ஐபிஎல் சீசன் சீசனாக நடைபெற்று வருகிறது அதன்படி 16-வது சீசன் மார்ச் 31 மாதம் ஆரம்பித்து தற்போது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து உள்ளது. ஒவ்வொரு அணியும் பிலே ஆஃபில் இடத்தைப் பிடிக்க போட்டி போட்டு வருகிறது. அதன்படி அண்மையில் சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா ஆகிய அணிகள் சென்னையில் பல பரிச்சை நடத்தின.

டாஸ் வென்ற தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் இதனை எடுத்து களம் கண்ட சென்னை அணி ஆரம்பத்திலேயே அதிரடி காட்ட ஆரம்பித்தாலும் ஒரு பக்கம் என விக்கெட்டை இழந்தது குறிப்பாக கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி, நரேன் போன்றவர்கள் சிறப்பாக பந்து வீசி சிஎஸ்கே அணி வீரர்களுக்கு ரன்களை விட்டுக் கொடுக்காமல் விக்கெட்டை எடுத்தனர்.

இதன் மூலம் சென்னை அணி 20 ஓவர்களில் 144 ரன்கள் எடுத்தது இதனை எடுத்து 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற  இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களம் கண்டது ஆரம்பத்தில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை விழுந்தாலும்  ராணா மற்றும் ரிங்கு சிங் போன்றவர்கள்  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை பெற்றனர்.

இந்த வெற்றியை கொல்கத்தா அணியினர் பெரிய அளவில் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர் ஆகியவர்கள் சூப்பர்ஸ்டார்  ரஜினி வீட்டிற்கு சென்று அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு மட்டுமல்ல சில மணி நேரங்கள் அவருடன் பேசியும் இருந்தனர்.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் வேற லெவல் தலைவர் தரிசனம் உங்களுக்கு கிடைத்து விட்டது எனக்கூறி அந்த புகைப்படத்திற்கு கமெண்ட் அடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..