கடந்த சீசனில் வாங்கிய சம்பளத்தை விட 40 மடங்கு அதிகம் சம்பளம் வாங்கும் KKR வீரர்.!

KKR
KKR

அடுத்த வருடம் ஐபிஎல் 15 வது சீசன் கோலாகலமாக நடத்தப்பட இருப்பதால் அனைத்து அணிக்கும் புது நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 8 அணிகள் விளையாடி வந்த ஐபிஎல் போட்டி இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்ட 10 அணிகள் அடுத்து விளையாட இருக்கிறது.

அதற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்க வைத்துக்கொண்டு மீதி வீரர்களை ரிலீஸ் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது இதனை அடுத்து சிறந்த வீரர்களை ஒவ்வொரு அணியும் தன்வசப்படுத்திக் கொண்டு மீதி வீரர்களை ரீலிஸ் செய்து உள்ளது.

அந்த வகையில் கேகே ஆர் அணி சிறந்த நான்கு வீரர்களை தன்வசப்படுத்தி உள்ளது அந்த வகையில் முதலாவதாக ஆல்ரவுண்டர்ரஸ்சூலை 12 கோடிக்கு தக்க வைத்துயுள்ளது. சக்கரவர்த்தி 8 கோடி  வெங்கடேச ஐயர் 8 கோடி சுனில் நரேன் 6 கோடி கொடுத்து தக்க வைத்துக்கொண்டுள்ளது.

அதிலும் குறிப்பாக வெங்கடேஷ் ஐயர் 8 கோடிக்கு போனது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது அந்த அணி ஆரம்பத்தில் வெறும் வெங்கடேச ஐயரை 20 லட்சத்துக்கு தான் அடிப்படையாக எடுத்தது. ஆனால் கடந்த வருடம் வெங்கடேஷ் அய்யரின் ஆட்டம் மிக சிறப்பாக இருந்ததால் அவரை தற்போது 8 கோடி கொடுத்து தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இதன் மூலம் அவரது சம்பள உயர்வு முந்தைய சம்பளத்தை காட்டியும் 40 மடங்கு அதிகரித்துள்ளது. இவரைப்போலவே சிஎஸ்கே அணியின் தொடக்க வீரரான  ருத்ராஜ் சம்பளம் இப்போ 6 கோடியாக கொடுக்கப்பட்டுள்ளது ஏற்கனவே வாங்கிய சம்பளத்தைவிட இப்ப அவரது சம்பளம் 30 மடங்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.

KKR vengadeh iyer
KKR vengadeh iyer