இன்று கிஸ் டே என்பதால் ரசிகர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் முத்தம் கொடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ஷேர் செய்து வருகிறார்கள். பிப்ரவரி 14ஆம் தேதி அதாவது நாளை காதலர் தினம் என்பதால் பிரபலங்கள் பலரும் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக கொண்டாட இருக்கிறார்கள்.
காதலர் தினத்திற்கு முன்பு சாக்லேட் டே, ஹக் டே, டெடி டே, ப்ரொபோஸ் டே என காதலர்கள் மிகவும் கொண்டாடி வந்தார்கள் இந்த நிலையில் இன்று கிஸ் டே என்பதால் காதலர்கள் கொண்டாடி வருகிறார்கள் முத்தம் என்றால் கை கழுத்து நெற்றி என உங்களுடைய மனதிற்கு பிடித்தவருடன் முத்தத்தை கொடுத்து பரிசு பொருளையும் கொடுத்து அசத்தலாம்.
அதேபோல் சினிமா பிரபலங்கள் பலரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள் அந்த வகையில் பல பிரபலங்கள் வாழ்க்கையில் ஜெயித்தாலும் ஒரு சில பிரபலங்கள் ஒரு சில வருடங்களில் திருமணம் செய்து கொண்டு விவாகரத்தும் பெற்று வருந்தி வருகிறார்கள். அப்படி பல பிரபலங்களை நாம் கூறிக் கொண்டே செல்லலாம் அதுமட்டுமில்லாமல் ஒரு சிலர் பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து விட்ட திடீரென விவாகரத்து என்ற செய்தியை கூறி சினிமா பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் தனுஷ் தன்னுடைய மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுடன் பல வருடம் ஒன்றாக வாழ்ந்து விட்டு திடீரென விவாகரத்து என்ற செய்தியை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அப்படி இருக்கும் நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் நீண்ட வருடமாக காதலித்து வந்தார்கள் இவர்கள் இருவரும் எப்பொழுது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென இவர்கள் திருமணம் செய்து கொண்டது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.
கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதி மிகவும் பிரபலமாக நடைபெற்றது அதேபோல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டு ஆண் குழந்தை இவர்களுக்கு பிறந்தது இது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது சர்ச்சை எல்லாம் ஓய்ந்த பிறகு நயன்தாரா மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு பிஸியாகிவிட்டார் தற்பொழுது ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் நயன்தாரா ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
பொதுவாக நடிகைகள் திருமணமானாலே கேரியர் போய்விடும் என பயப்படுவார்கள் ஆனால் நயன்தாராவுக்கு திருமணத்திற்கு பிறகும் அதிக பட வாய்ப்பு கிடைத்து வருவதால் குஷியில் இருக்கிறார் இந்த நிலையில் விக்னேஷ் சிவன் நயன்தாராவை காதலிக்கும் பொழுது அடிக்கடி முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வருவார். இந்த நிலையில் இன்று கிஸ் டே என்பதால் ரசிகர்கள் பலரும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் முத்தம் கொடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு கிஸ் டேவை கொண்டாடி வருகிறார்கள்.
