சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு புலம்பித் தள்ளிய பிரபல நடிகை.! இவுங்க மட்டும் நடிச்சிருந்தா வேற லெவல்

0

தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த்.  அந்த காலகட்டத்தில் மிகவும் சுறுசுறுப்பாக நடிக்க கூடிய ஒரு நடிகர் என்றால் அது சூப்பர் ஸ்டார் நடிகர் ஆவார். அதேபோல் இன்று வரை தன்னுடைய எனர்ஜிக்கு எண்டு கார்டு இல்லை என நிரூபித்தவர். தர்பார் திரை படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிகவும் ஸ்டைலாக நடித்து பார்ப்போரை பிரமிக்க வைத்தார்.

அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடியாக நடிக்க பல நடிகைகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்து விட்டோம் என புலம்பித் தள்ளி வருகிறார் ஒருநடிகை.

சரண் இயக்கத்தில் ஏவிஎம் தயாரிப்பில் விக்ரம் நடிப்பில் வெளியாகிய திரைப்படம்தான் ஜெமினி. இந்த திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் தான் கிரண் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

இவர் அஜீத் குமாருடன் வில்லன் திரைப்படத்திலும் கமலஹாசனுடன் அன்பே சிவம் திரைப்படத்திலும் பிரசாந்த் அவர்களுடன் வின்னர் திரைப்படத்திலும் நடித்து ஹிட் திரைப்படங்கள் கொடுத்துள்ளார். அதேபோல் கிரண் பல திரைப் படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். சகுனி, ஆம்பள, சர்வர் சுந்தரம் என ஒரு சில திரைப்படங்களை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

முதன் முதலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்கும் வாய்ப்பை இழந்து விட்டதாக நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம்தான் பாபா இந்த திரைப்படத்திற்கு ரஜினிதான் கதையை எழுதினார்.  இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்து இருப்பார்.

ஆனால் பாபா திரைப்படத்தில் முதன் முதலில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதற்கு கிரன் அவர்களை அணுகி உள்ளார்கள் ஆனால் அச்சமயத்தில் வின்னர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதன்பிறகு வின்னர் திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றி அடைந்தது.

Kiran-Rathod-tamil360newz
Kiran-Rathod-tamil360newz