நடிகைகளை மிஞ்சிய பாட்டி.! ரவுடி பேபி பாடலுக்கு என்னம்மா நடனமாடுகிறார்.! வைரலாகும் வீடியோ

2018 ஆம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகிய திரைபடம் மாரி 2 இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார் மேலும் வரலட்சுமி சரத்குமார், டோவினோ தாமஸ் ஆகியோர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் உள்ள ரவுடி பேபி பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது, அதுமட்டுமல்லாமல் யூடிபில் பல சாதனைகளை நிகழ்த்தியது. இன்னும் ரவுடிபேபி பாடல் பல இளைஞர்களின் ஃபேவரட் தான்.

இந்தப் பாடலைக் கேட்டாலே பலரும் ஆடுவார்கள் அந்த வகையில் சமீபத்தில் பாண்டிச்சேரியில், ஆளுநர் கிரண்பேடி தலைமையில் துப்புரவு பணியாளர்களுக்கு பொங்கல் விழா கொண்டாட்டம் நடைபெற்றது அந்த விழாவில் ஒரு பாட்டி ரவுடி பேபி பாடலுக்கு நடனமாடியுள்ளார் அந்த வீடியோவை கிரண்பேடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment