பத்து வருடமாகியும் ரஜினியை சந்திக்க முடியாமல் தவித்த கிங் காங்.! ஒரே போனில் ரஜினி என்ன சொன்னார் தெரியுமா.?

வெள்ளித்திரையில் கவுண்டமணி,செந்தில்,வடிவேலு போன்ற நடிகர்களின் திரைப்படத்தில் இணைந்து நடித்து பிரபலமான நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் தான் காமெடி நடிகர் கிங்காங் இவரது உண்மையான பெயர் சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவர் ரஜினி நடித்த அதிசய பிறவி என்ற திரைப்படத்தின் மூலம் தான் மக்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் இவர் அந்த படத்தில் ஆடிய பிரேக் டான்ஸ் மக்களால் தற்பொழுதும் மறக்க முடியாது என்றுதான் கூறவேண்டும் அதனைத் தொடர்ந்து இவர் ஐந்து மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் இவர் சினிமாவில் நடித்து பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

மேலும் இவர் தேசிய விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் இவரது திருமண வாழ்க்கையில் கலா என்பவரை திருமணம் செய்து கொண்டு இரண்டு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை தற்போது இவருக்கு உள்ளது இதனையடுத்து இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நான் விருது வாங்கிய பொழுது ரஜினி சார் அவரிடம் காட்டி ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்று நினைத்தேன்.

ஆனால் அது பலமுறை முயற்சி செய்தும் தற்போது வரை அவரை பார்த்து புகைப்படம் மற்றும் ஆசீர்வாதம் வாங்க முடியவில்லை என்று கூறியுள்ளாராம் இவர் அளித்த வீடியோ காணொளி சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி அந்த வீடியோ கடைசியாக ரஜினியிடம் சென்றுள்ளது மேலும் அந்த வீடியோவை பார்த்த ரஜினி உடனே போன் செய்து நீங்கள் என்னை பலமுறை முயற்சித்தது எனக்கு தெரியவில்லை.

தற்பொழுது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொஞ்ச நாள் ஆகட்டும் சரியானவுடன் நான் சொல்லுகிறேன் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் என்னிடம் வாருங்கள் என ரஜினி கிங்காங் இடம் போன் பண்ணி சொல்லியதாக தகவல் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

rajini
rajini

இதனை தொடர்ந்து பத்து வருடங்களாகியும் ரஜினியை பார்க்க முடியாமல் தவித்த இவருக்கு தற்போது ஒரு விடிவு காலம் பிறந்துவிட்டது என்று தான் கூற வேண்டும்.இதனையடுத்து இந்த தகவல் இவரது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருவது மட்டுமல்லாமல் இந்த தகவலை இவரது ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment