தமிழ்சினிமாவில் எப்பொழுதும் ஹீரோவுக்கு முக்கியத்துவம் இருக்கும் அடுத்தபடியாக ஹீரோயினுக்கும் ஓரளவிற்கு முக்கியத்துவம் இருக்கும், அதேபோல் வில்லனுக்கு ஒரு சில திரைப்படங்களில் மிகப் பெரிய முக்கியத்துவம் இருக்கும், அதேபோல் ஒரு சில வில்லன் கதாபாத்திரம் ஒரு திரைப்படத்தை மிகப்பெரிய ஹிட்டிற்கு அழைத்துச் செல்லும்.
பொதுவாக ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால் ஹீரோ பலரின் மனதில் இடம் பிடித்து விடுவார் ஆனால் வில்லன்களில் ஒரு சிலர் மட்டுமே ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பார்கள், அந்த வகையில் நடிகர் ரகுவரன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பலரின் மனதில் இடம் பிடித்திருந்தார். வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பல நடிகர்கள் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க முடியாமல் போகிறது, அந்த வகையில் பல திரைப்படங்களில் வில்லன்களுக்கு துணை கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் கராத்தே ராஜா.

இவர் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு பள்ளிகளில் கராத்தே வகுப்பு ஒன்றை நடத்தி வந்தார், இவர் சினிமாவில் வில்லனாக நடிப்பதற்கு ஆசை அதனால் பள்ளியில் கரத்தே சொல்லித் தருவதை விட்டுவிட்டு சென்னைக்கு வந்தார், மேலும் 2004 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளி ஆகிய விருமாண்டி திரைப்படத்தில் நடித்திருந்தார், இதுதான் தமிழ் சினிமாவில் அவருக்கு முதல் திரைப்படமாகும் அதுமட்டுமில்லாமல் முதல் திரைப்படத்திலேயே நல்ல பெயரை வாங்கி விட்டார்.
அதற்குப் பின்னர் இவருக்கு சினிமா துறையில் பல பட வாய்ப்புகள் வரத் தொடங்கின, சினிமாவில் பல திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தால் சந்தோசத்தில் மூழ்கினார் கராத்தே ராஜா. இதனை தொடர்ந்து விஜயின் கில்லி கமலஹாசனின் வசூல்ராஜா எம்பிபிஎஸ் போக்கிரி என பல திரைப்படங்களில் வில்லன்களுக்கு துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர், இதனைத் தொடர்ந்து சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கை வரலாறு கதையை உருவாக்கும் படத்தில் நடிகர் கராத்தே ராஜா அவர்கள் வீரப்பன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், சொல்லப்போனால் வீரப்பன் கதாபாத்திரமாகவே வாழ்ந்து வந்தார் கராத்தே ராஜா.

கராத்தே ராஜா அவர்களுக்கு 2009 ஆம் ஆண்டு திவ்யா என்பவருடன் திருமணமானது, இந்த அழகான தம்பதிகளுக்கு தற்பொழுது மூன்று பெண் குழந்தைகள் இருக்கிறது. இதனோடு திருமணம் ஆன பிறகும் பல திரைப்படங்களில் நடித்து வந்தார் கராத்தே ராஜா ஆனால் ஒருசில காரணத்தால் அவரது மனைவி திவ்யா வீட்டை விட்டு வெளியேறினார் மேலும் காட்டு ராஜா போலீசில் தனது மனைவியை காணவில்லை என புகார் செய்தார். அதன் பிறகு வீட்டிற்கு வந்து சேர்ந்தார் திவ்யா தற்பொழுது இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.