சினிமாவுலகில் திறமை இருந்தால் போதும் படிப்படியாக நாம் அடுத்தடுத்த கட்டத்தை எட்ட முடியும் அதற்கு உதாரணமாக இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா வையே சொல்லிவிடலாம். தமிழில் இவர் 2000 காலகட்டங்களில் அஜித் விஜய் போன்ற டாப் நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வெற்றி கண்டவர் அதோடு மட்டுமல்லாமல் நடிகராகவும் தன்னை மாற்றிக் கொண்டவர் என்பது குறிப்பிடதக்கது.
சினிமா உலகில் ஆரம்பத்தில் இயக்குனராக இருந்து நடிகராக மாறினார் இவரது ஆரம்பகால கட்டத்தில் நடித்த படங்கள் பெரும் தோல்வியை சந்தித்ததால் நடிப்பு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டு நடிப்பில் கவனம் செலுத்தினார். அண்மை காலமாக இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே மெகா ஹிட்டாக அமைந்து உள்ளன.
ஹீரோவாக இருந்தாலும் சரி வில்லன் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி இவர் நடிக்கும் படங்கள் நல்ல வரவேற்ப்பை மக்கள் மத்தியில் பெறுகின்றன. அந்த வகையில் ஸ்பைடர் மெர்சல் மாநாடு போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்து உள்ளது.
மேலும் பல்வேறு புதிய படங்களின் வாய்ப்புகள் குவிந்து வருவதால் தற்போது எஸ் ஜே சூர்யாவின் சினிமா பயணம் ஏறுமுகமாக அமைந்துள்ளது இந்த நிலையில் இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா குறித்து விஜய் பேசிய தகவல் ஒன்று சமூகவலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
சினிமாவில் வெற்றி தோல்வி வருவது சகஜம் என்னுடைய கேரியரில் மிக முக்கியமான நேரத்தில் நான் அதாவது வாழ்வா சாவா என்கின்ற சுச்சுவேஷன் இருந்தேன் அந்த நேரத்தில் குஷி என்கின்ற ஒரு மாபெரும் சூப்பர் ஹிட் படத்தை எஸ் ஜே சூர்யா எனக்கு கொடுத்து அசத்தினார் இந்த படம் ரிலீஸ் ஆனது விக்ரம் சார் என்கிட்ட வந்து விஜய் இந்த படத்தில் அப்படி என்ன கதை என்று கேட்டார்.
அதற்கு நான் தான் சார் இதை எஸ். ஜே.சூர்யா எஸ். ஜே.சூர்யா என்ற ஒருத்தர் இருக்காரு அவர் கதை சொல்லி நீங்க கேட்கலாம் சார் கதை சொல்றதுல அவர் கில்லாடி சார்.கதை சொன்னது இல்ல நான் மெஸிமரைஸ் ஆகிவிட்டேன் என கூறி சர்ச்சையை சூரிய குறித்து விஜய் புகழ்ந்து பேசியுள்ளார்.