நடிகை குஷ்பூ தர்மத்தின் தலைவன் என்ற திரைப்படத்தில் நடித்து சினிமா உலகில் என்ட்ரி ஆனார். முதல் படத்திலேயே ரஜினிகாந்த், பிரபு ஆகியோருடன் இணைந்து நடித்ததால் இவரும் பெரிய அளவில் பிரபலம் ஆனார். அதன்பின் வருசம்16, வெற்றிவிழா, கிழக்குவாசல், நானும் இந்த ஊருதான், மைடியர் மார்த்தாண்டன், சின்னதம்பி, கிழக்கு கரை, பாண்டியன், அண்ணாமலை.
மற்றும் மன்னன், சிங்காரவேலன், ரிக்சா மாமா, நாட்டாமை, முறைமாமன் என தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து அசத்தினார். இதனால் 90ம் ஆண்டு அசைக்க முடியாத நடிகை மாறினார். மேலும் வருடத்திற்கு 5,6 படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வெற்றியை நோக்கிய ஓடிக்கொண்டிருந்த குஷ்பூ 2000 ம் ஆண்டு சுந்தர் சி திருமணம் செய்துகொண்டார்.
சுந்தர் சி. இவர்கள் இருவருக்கும் இரு மகள்கள் உள்ளனர். ஒரு கட்டத்தில் வீட்டின் குடும்ப பொறுப்பை எடுத்து நடத்திக் கொண்டு இருந்தார். மறுபக்கம் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் தனது திறமையை காட்ட ரெடியாக இருக்கிறார் அந்த வகையில் அண்மையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான அண்ணாத்த..
திரைப்படத்தில் உடல் எடையை குறைத்து செம சூப்பராக நடித்து அசத்தினார். இப்பவும் தொடர்ந்து பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை குஷ்புவின் தம்பி குறித்து ஒரு தகவல் வெளியாகியது. குஷ்புவின் தம்பியின் பெயர் அப்துல்லா. இவர் 2007 ஆம் ஆண்டு வெளியான மாயமோகினி என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து அறிமுகமானார்.
அதன்பின் பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை. என்ன செய்தார் என்றும் தெரியவில்லை. இந்த நிலையில் நடிகை குஷ்பு தனது தம்பியுடன் இளம் வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.