வலிமை படத்தின் வசூல் சாதனையை முறியடித்த கேஜிஎப் 2.? தமிழ்நாட்டில் கெத்து காட்டும் யாஷ்.!

தமிழில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வரும் ரஜினி, அஜித், சூர்யா, விஜய் போன்றவர்களின் படங்கள் வெளிவருகிறது என்றால் ரசிகர்கள் பெரிய ஆரவாரத்துடன் வரவேற்பார்கள். அப்படி அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வலிமை திரைப்படம்.

மக்கள் மற்றும் குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று அதிகளவு வசூலை வாரி குவித்தது. தமிழில் வந்த திரைப்படங்களில் அதிக வசூலில் வலிமை திரைப்படம் உள்ள நிலையில். அடுத்து விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த படி அமையாததால் கலவையான விமர்சனத்தை பெற்றது.

இருந்தாலும் வசூலில் குறைச்சல் இல்லாமல் நல்ல வசூல் வேட்டைநடத்தி வந்தது.  பீஸ்ட் படம் வெளிவந்த அதே சமயத்தில் கேஜிஎப் 2 படம் வெளி வந்ததால் அந்த படத்தின் கதை சிறப்பாக அமைய ரசிகர்கள் பலரும் கேஜிஎஃப் 2 படத்திற்கே பெரிய ஆர்வம் காண்பித்தனர்.

இந்த கே ஜி எஃப் 2 படம் உலக அளவில் அதிக இடங்களில் வெளியாகி ஆயிரம் கோடிகளைத் தாண்டி வசூல் வேட்டை நடத்தி வருகின்ற நிலையில் 2000 கோடியை தொட்டு சாதனை படைக்கும் எனவும் எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டின் டாப் 5 பாக்ஸ் ஆபிஸ் குறித்து விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் முதல் இடத்தில் விஜயின் பீஸ்ட் படம், இரண்டாவது இடத்தில் நடிகர் யாஷினி கேஜிஎப் 2, மூன்றாவது இடத்தில் அஜித்தின் வலிமை, நான்காவது இடத்தில் ரஜினியின் அண்ணாத்த, ஐந்தாவது இடத்தில் ராம்சரனின் RRR படம் இடம் பெற்றுள்ளன. இதில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் வலிமை படத்தின் சாதனையை முந்தி உள்ளது கேஜிஎப் 2 படம்.

Leave a Comment