கொரோனா : கேஜிஎஃப் பட இசையமைப்பாளர் நிலைமையை பார்த்தீர்களா வைரலாகும் வீடியோ.!

நடிகர் யாஷ் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் கேஜிஎப், இந்த திரைப்படம் கன்னடத்தில் மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் வெளியாகி பலதரப்பட்ட ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது, இந்த திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய சாதனை படைத்தது.

அதனால் இந்த திரைப்படத்தை படக்குழு இரண்டாவது பாகத்தை எடுத்து வருகிறார்கள், கேஜிஎப் 2 படத்தின் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வந்தது. ஆனால் தற்பொழுது கொரோனா காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் ஒரு மாத காலமாக சினிமாவே முடங்கியுள்ளது, அதனால் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் சினிமா தொழிலாளர்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கிறார்கள்.

கே ஜி எஃப் திரைப்படத்தின் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் தனது சொந்த ஊருக்கே சென்றுவிட்டார். தற்போது, தனது குடும்பத்தினருடன் பொழுதை கழித்து வருகிறார். கொரோனா வந்தால் என்ன தனது அப்பா செய்யும் தொழிலை செய்யலாம் என அதில் இறங்கி உதவி செய்து வருகிறார்.

அவருடைய அப்பா கொல்லர் ஆக இருக்கிறார். அவர் பணிகளுக்கு தற்பொழுது கேஜிஎப் இசையமைப்பாளர் உதவி செய்து வருகிறார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோவை அவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார், அந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

https://www.facebook.com/ravibasrurofficial/videos/349819682594095/

பல முன்னணி பிரபலங்கள், நடிகர் மற்றும் நடிகைகள் வீடுகளில் இருந்துகொண்டு பொழுதுபோக்காக ஜிம் ஒர்கவுட் செய்வது, சமைப்பது, புகைப்படத்தை வெளியிடுவது ஆகியவற்றை செய்து வருகிறார்கள் ஆனால் இவர் வித்தியாசமாக இதுபோல் வீடியோவை வெளியிட்டுள்ளது இணைய தளத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் கேஜிஎப் இசையமைப்பாளர் தன்னுடைய அப்பா 35 ரூபாய் சம்பாதிக்க தான் உதவியதாக இருந்ததாக  அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்..

https://www.facebook.com/ravibasrurofficial/posts/3068748773175721

Leave a Comment