சினிமாவிற்கு அறிமுகமாகி இருக்கும் அனைத்து நடிகைகளும் தொடர்ந்து தங்களுடைய இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த வருகிறார்கள். மேலும் ஒரு சில நடிகைகள் மட்டும் லட்சக்கணக்கில் ஃப்லோசர்களை வைத்துள்ள நிலையில் இதன் மூலம் சம்பாதித்து வருபவர்களும் இருக்கிறார்கள் அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் பிரபல நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி.
நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி துளு நாட்டை சேர்ந்த நடிகை சமீபத்தில் தமிழில் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த கோபுரா திரைப்படத்தில் பாவனா மேனன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது மேலும் இவர் மிஸ் கர்நாடகா பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர் நடிகர் யார் உடன் இணைந்து கேஜிஎஃப் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தின் மூலம் கன்னட சினிமாவிற்கு அறிமுகமான இவர் பிறகு இந்த ஆண்டு வெளிவந்த KGF Chapter 2 என்ற திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் நடிகையாக அறிமுகமானார். இவ்வாறு இயக்குனர் பிரசாந்தில் இயக்கத்தில் கேஜிஎப் சாப்டர் 2 படத்தில் ஹீரோவாக ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார்.

மேலும் இவர்களுடன் இணைந்து பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், பிரகாஷ்ராஜ், மாளவிகா அவினாஷ், ஈஸ்வரி ராவ், ஜான் கொக்கன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். மேலும் பல கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் 14ஆம் தமிழ் புத்தாண்டு அன்று திரையரங்குகளில் வெளியாகிய உலகம் முழுவதும் 1200 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.

இதன் மூலம் பிரபலமடைந்த ஸ்ரீநிதி ஷெட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பாராட்டு கிடைத்தது. இந்நிலையின் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்பொழுது மஞ்சள் நிற பட்டு சேலையில் நடத்தியுள்ள போட்டோ சூட் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அதில் “என் அழகான மக்கள் நீங்கள் கேட்டதற்காக” என குறிப்பிட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகிறது.
