கே ஜி எஃப் எல்லாம் ஒரு கதையா.? முதலில் நடிக்க தயங்கிய யாஷ்..! கடைசி நேரத்தில் கதையை மாற்றியஇயக்குனர்.

0
kgf
kgf

சமீப காலமாக பிறமொழி படங்கள் தமிழ் சினிமா பக்கம் வெளிவந்து பிரம்மாண்டமான வெற்றியை பெறுகின்றன அந்த வகையில் பாகுபலி, பாகுபலி 2 படத்தை தொடர்ந்து நல்ல வரவேற்பு தமிழ் சினிமாவில் பெற்ற திரைப்படம் கே ஜி எஃப் அதனைத் தொடர்ந்து அதன் இரண்டாவது பாகமும் நல்ல வரவேற்பை..

தமிழ் சினிமாவில் பெற்றது.. அந்த படம் உலக அளவில் ஒட்டுமொத்தமாக சுமார் 1200 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது. கே ஜி எஃப் படத்தை தனக்கே உரிய பாணியில் பிரசாந்த் நீல் இயங்கினார். யாஷ் கதைக்கு ஏற்றவாறு தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி கே ஜி எஃப் மற்றும் கே ஜி எஃப் 2..

போன்ற படங்களில் சூப்பராக நடித்து படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார். மேலும் இசையும் சும்மா சொல்லிவிடக்கூடாது சூப்பர் கிராபிக்ஸ் செம்ம.. அனைத்தும் கேஜிஎப் படத்திற்கு சூப்பராக செட் ஆகியதால் அந்த படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது இன்னும் பலருக்கும் பிடித்த படமாக இருந்து வருகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் பிரசாந்த் நில் கேஜிஎப் கதையை வேறு மாதிரி தான் உருவாகி இருந்ததாக ஒரு பக்கம் கிசுகிசுக்கப்படுகிறது. இயக்குனர் பிரசாந்த் நில் முதலில் யாஷிடம் சொன்ன கதை ஒரு சின்ன பகுதியில் தான் தங்க சுரங்கம் குறித்து சொல்லி உள்ளாராம். ஆனால் நடிகர் யாஷ் தங்க சுரங்கம் சற்று வித்தியாசமாக இருக்கிறது.

அதை டெவலப் பண்ணுங்கள் என கூறியுள்ளாராம். பிறகு இயக்குனர் கதையை முற்றிலுமாக மாற்றி எழுதினாராம். பிறகு சொன்ன கதை யாஷுக்கு ரொம்ப பிடித்துப் போகவே அதுதான் கே ஜி எஃப் படமாக உருவாக்கியதாக ஒரு தகவல் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.