KGF பட இயக்குனர் பிரசாந்த் நீல்..ஸ்ருதிஹாசனை அடுத்த கமீட் செய்துள்ளாரா.? போட்டோ உடன் வைரலாகும் புதிய தகவல்.

திரை உலகில் முன்னணி ஜாம்பவான்களான விளங்கும் பிரபலங்களின் மகன், மகள்கள் சினிமா உலகில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஆரம்பத்திலேயே நடிக்க தொடங்குவது வழக்கம்.

அப்படி தமிழ் திரை உலகில் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையிலும் உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு நடித்து வருபவர் நடிகை சுருதி ஹாசன்.

இவர் ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்தார் இதுவே இவரது முதல் திரைப்படம் அதன்பின் தனுஷுடன் 3,  விஷாலுடன் பூஜை, அஜித்துடன் வேதாளம், சூர்யாவுடன் சிங்கம், விஜயுடன் புலி போன்ற அடுத்தடுத்த உச்ச நட்சத்திரங்கள் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தற்போது யாரும் அசைக்க முடியாத இடத்தில் இருந்து வருகிறார்.

மேலும் தமிழையும் தாண்டி தெலுங்கு, இந்தி போன்றவற்றிலும் கொடிகட்டி பறந்து வருகிறார்.

இடையில் காதல் வயப்பட்டார் இருப்பினும் அந்த காதல் தோல்வியில் முடிந்ததால் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார் அதனை வெளிக்காட்டும் விதமாக ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தவர் தற்போது அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கைப்பற்றி வருகிறார்.

இது போன்ற ஒரு நிலையில் சுருதிகாசன் அடுத்ததாக கே ஜி ஆர் பட இயக்குனர் இயக்கத்தில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக சுருதிஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.

இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment