ரசிகர்களுக்காக 250 கோடியை தூக்கி எறிந்த கேஜிஎஃப் படக்குழு.!

பாலிவுட் சினிமாவில் ஒரு மாபெரும் பிரம்மாண்டமான திரைப்படம்தான் கேஜிஎப் இந்த படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  இத்திரைப்படத்தில் யாஷ் அவர்கள் ஹீரோவாக நடித்து பிரபலமானவர்.

இந்த வகையில் தற்போது கேஜிஎஃப் இரண்டாம் பாகம் எடுத்து முடித்து உள்ளனர். இத்திரைப்படத்தில்  ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

கே ஜி எஃப் 2 திரைப்படம் கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி உலகம் முழுக்க வெளியாகும் ஏற்கனவே பட குழு அறிவித்துள்ளது. ஆனால் கொரோனாவின் அடுத்த அலையால் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, என பல மாநிலங்களில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது.

KGF 2
KGF 2

கேஜிஎப் 2 படத்திற்கான ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் இயக்குனர் பிரசாந்த் அவர்கள் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் முன்னணி ஓடிடி தளம் கேஜிஎப் 2 திரைப்படத்தை ரூபாய் 250 கோடிக்கு நேரடியாக வெளியிட கேட்டுள்ளது.

இதற்கு நடிகர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை தியேட்டரில் மட்டும் தான் கேஜிஎஃப் பாகம் 2 படத்தை ரசிகர்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காக ஓடிடி தளத்திற்கு மறுப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Comment