கே.ஜி.எஃப் இயக்குனரின் அடுத்த திரைப்படம்.! இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.!

0

ராஜமௌலி இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் தான் RRR இந்த திரைப்படத்தை ராஜமௌலியின் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பாத்து பார்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரும் நடித்து வரும் கதாபாத்திரங்களை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி மற்றும் பாகுபலி இரண்டாம் பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் அதிகம் வசூல் செய்து சாதனை படைத்தது அதனைத் தொடர்ந்து தற்போது இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 15 நாட்கள் மட்டும் மீதம் உள்ளது என தகவல் சமீபத்தில் வெளியானது ஆனால் ஒரு சில காரணங்கள் குறித்து தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என சமீபத்தில் ஒரு தகவல் கசிந்துள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் கதாபாத்திரத்தின் புதிய போஸ்டர் நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார்கள்.

இதனையடுத்து அவர் நடிக்கும் புதிய திரைப்படத்தை பற்றி ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது அதாவது ஜூனியர் என்டிஆர் நடிக்கும் 31வது படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது அதில் கே ஜி எஃப், சலார் போன்ற படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்குவதாகவும் இந்த திரைப்படத்தை மைதிரி மூவி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இவர் நடிக்கும் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற வேண்டும் என்பது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் நல்ல வசூல் செய்ய வேண்டும் என சமூக வலைதளப் பக்கங்களில் கூறி வருகிறார்கள்.