சாதனை படைத்துவரும் பீஸ்ட் ட்ரைலர் – பார்த்துவிட்டு KGF இயக்குனர் போட்ட ட்வீட்.!

விஜய் நடிப்பில் இப்பொழுது உருவாகியுள்ள திரைப்படம்  பீஸ்ட்.  இந்த திரைப்படத்தை தனக்கே உரிய பாணியில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் எடுத்துயுள்ளார். இவர் படங்கள் இன்றுவரை வித்தியாசமாக இருந்து வந்துள்ளன அந்த வகையில் கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய திரைப்படங்களை..

தொடர்ந்து இந்த படமும் ஒரு வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதற்கு ஏற்றார் போல இந்த படத்திலிருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர், இரண்டு பாடல்கள், சில போஸ்டர்கள் வெளிவந்த நிலையில் நேற்று இந்த படத்தின் டிரைலரும் வெளியாகியது. இந்த ட்ரைலரை பார்க்கும் பொழுது அதிகம் சண்டை காட்சிகள் இருப்பதாக தெரியவருகிறது.

அதேசமயம் இந்தப் படத்தில் யோகி பாபு,  ரெடின் கிங்ஸ்லி மற்றும்  விவிடி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளதால். இந்தப் படத்தில் காமெடியும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பீஸ்ட் படம் வருகின்ற ஏப்ரல் 13 ம் தேதி உலக அளவில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை எதிர்த்து வருகின்ற ஏப்ரல் 14ம் தேதியில் நடிகர் யாஷின் கே ஜி எஃப் 2 திரைப்படம் வெளியாக உள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் கேஜிஎஃப் படத்தை.. இயக்கிய பிரஷாந்த் நீல் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலரை பார்த்து விட்டு கமெண்ட் கொடுத்து உள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது. Wow! Looks better than ever, trailer looks amazing என பதிவிட்டுள்ளார்.

இவரைப் போலவே கேஜிஎப் படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு நெல்சன் பாராட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரின் படங்களும் நேருக்கு நேர் மோதினாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சந்தோஷமாக மாறிமாறி படங்களை பாராட்டி கொள்கின்றனர்.

https://twitter.com/prashanth_neel/status/1510517488794038282?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1510517488794038282%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fkgf-dir-reaction-beast-trailer-1648974135

Leave a Comment