சலார் என்றால் என்ன சலார் என்றால் என்ன? என்ற ரசிகர்களின் கேள்விக்கு kgf இயக்குனர் விளக்கம்.!

கேஜிஎப் சாப்டர்1 என்ற திரைப்படம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு  வெளியாகி இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இத்திரைப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் என்பவர் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்திற்க்கு ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் ஆதரவு தெரிவித்து வெற்றி பெற செய்தனர்.

தற்போது கேஜிஎப் யின் 2ஆம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த நிலையில் இவர் தெலுங்கு நடிகர் பிரபாஸை வைத்து சலார் என்ற திரைப்படத்தை இயக்குக்கிறார்.

இதனை அறிந்த ரசிகர்கள் இயக்குனரிடம் சலார் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன என சோசியல் மீடியாவில் ஒரு கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

ரசிகர்களின்  சந்தேகத்தினை தீர்க்கும் வகையில் சலார் என்ற வார்த்தைக்கு ஒரு அரசனின் வலது கரம் போன்றவன் சேனாதிபதி என்று சொல்லலாம் என கூறியுள்ளார்.

salar
salar

Leave a Comment