பிரமாண்ட கூட்டணி கேஜிஎப் இயக்குனரின் அடுத்த திரைப்படம் இந்த முன்னணி ஹீரோவுடன் தான்.! வெளியாகிய அதிரடி அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டம்.!

கன்னட சினிமா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று புதிய புரட்சியை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது கேஜிஎப் தான், இதுவரை எந்த கனடா திரைப்படமும் இப்படி உயர்த்தியது கிடையாது ஆனால் கேஜிஎப் திரைப்படம் உலகம் முழுவதும் கன்னட சினிமாவை பெருமை பட வைத்தது.

இந்த திரைப் படத்தில் ஹீரோவாக நடித்த யாஷ் உலகப் புகழ் பெற்றார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், கே ஜி எஃப் முதல் பாகம் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் படக்குழு KGF இரண்டாம் பாகத்தை அட்டகாசமாக தயாரித்து வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் கேஜிஎப் இரண்டாம் பாகத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வருகிறார்கள், அதனால் கேஜிஎப முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் மிரட்டலாக இருக்கும் என பலரும் கூறுகிறார்கள், கேஜிஎஃப் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் கேஜிபி இரண்டாம் பாகத்தினை தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என பல மொழிகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது, இந்த படத்தை அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் வெளியிட தயார் செய்து வருகிறார்கள், தற்பொழுது கன்னடத்தில் டாப் இயக்குனர் என்றால் KGF திரைப்படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் தான்.

இவர் முதன்முதலில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ஜூனியர் என்டிஆர் அவர்களை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறாராம் இந்த திரைப்படத்தை மைத்திரி மூவிஸ் சார்பில் தயாரிக்க இருக்கிறார்கள் அந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் நிறுவனமே அறிவித்திருந்தது, இந்த நிலையில் ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் தலை கால் புரியாமல் சமூகவலைதளத்தில் ஆடி வருகிறார்கள்.

Leave a Comment