லோகேஷ் கனகராஜிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன “கே ஜி எஃப்” பட நடிகர்.. வெளிவந்த கியூட் புகைப்படம்

தமிழ் சினிமாவில் தோல்வியை காணாத இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ் இவர் முதலில் மாநகரம் என்னும் படத்தை எடுத்து வெற்றி கண்டார் அதனைத் தொடர்ந்து இவர் கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில் இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க விஜய் உடன் மீண்டும் கூட்டணி  அமைத்து “லியோ” படத்தை எடுத்து வருகிறார்.

இந்த படம் முழுக்க முழுக்க போதை பொருளை மையமாக வைத்து உருவகுவதால் படத்தில் ஆக்சனுக்கு பஞ்சம் இருக்காது என தெரிய வருகிறது அதற்கு ஏற்றார் போல படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து  அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், திரிஷா, பிரியா ஆனந்த், பிக்பாஸ் ஜனனி மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

லியோ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளூர் என்று கூட பார்க்காமல் படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.  இதுவரை மட்டும் மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன் போன்ற காட்சிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மற்றப்படி அனைத்து நடிகர், நடிகைகளும் விறுவிறுப்பாக நடித்து வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலைமையில் இன்று பிறந்தநாள் காணும் லோகேஷ் கனகராஜிக்கு படக்குழுவில் இருக்கும் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.  அதன்படி இந்த படத்தில் புதிதாக இணைந்த நடிகர் சஞ்சய் தத் இயக்குனர் லோகேஷுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் சொன்னது.. என்னுடைய சகோதரனே.. மகனே மற்றும் என் குடும்பத்தில் ஒருவர் லோகேஷ் கனகராஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கூறி லோகேஷ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அதில் பதிவிட்டு இருக்கிறார்.. இதோ நடிகர் சஞ்சய் தத் போட்ட அந்த  பதிவு மற்றும் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Leave a Comment