நாளை தரமான சம்பவம் செய்யப்போகும் கேஜிஎப் 2.! இதோ அதிரடி அப்டேட்

ஒரு காலகட்டத்தில் கன்னட சினிமாவை பலரும் ஏளனமாக பேசிய காலம் உண்டு ஆனால் கன்னட சினிமாவையே இந்திய அளவில் திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் கே ஜி எஃப் இந்த திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

இன்றளவும் கேஜிஎப் திரைப்படம் பல ரசிகர்கலுக்கு பிடித்த திரைப்படமாக அமைந்துவிட்டது, கேஜிஎப் திரைப்படம் ஒவ்வொரு காட்சியிலும் அதிரடி காட்டி இயக்குனர் பிரசாந்த் நீள்  இயக்கியிருந்தார்.  அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் மிகவும் கச்சிதமாக நடித்திருந்தவர் யாஷ்.

இவர் இந்த திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருகிறார். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகி விட்டார்கள்.  கேஜிஎப் முதல் பாகம் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாம் பாகம் தாறுமாறாக உருவாகி வருகிறது.

இந்த இரண்டாம் பாகத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார், ஒட்டுமொத்த ரசிகர்களும் இந்த திரைப்படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இந்த நிலையில் இந்த திரைப்படம் கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

kgf 2 teaser
kgf 2 teaser

மேலும் இந்த திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது இந்த நிலையில் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்பதை அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

அப்படி இருக்கும் வகையில் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக நாளை காலை 10:18 மணிக்கு கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் டீசர் வெளியாக இருக்கிறது, இதனை மிரட்டலான போஸ்டர் மூலம் படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள்.

kgf 2 teaser
kgf 2 teaser

Leave a Comment