முன்பதிவில் பாகுபலி-2 சாதனையை தட்டி தூக்கிய KGF-2.! அடேங்கப்பா இத்தனை கோடியா.?

இந்திய அளவில் பேசப்படும் மிகப் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படம் திரைக்கு வந்தால் எவ்வளவு வசூல் என்பது மிகவும் பிரபலமாக பேசப்படும். அந்த வகையில் முன்பதிவு விடுமுறை நாட்கள் முன்பதிவு ஆகியவை எவ்வளவு இருக்கும் என கணித்துக் கூறுவார்கள். அந்தவகையில் ஹிந்தி படங்களை பொருத்தவரையில் முன்பதிவு மூலம் 37 கோடி ரூபாய் வசூலித்து முதலிடத்தில் இருந்து வந்தது பாகுபலி இரண்டாவது பாகம்.

ஆனால் அந்த சாதனையை முறியடித்துள்ளது KGF இரண்டாவது பாகம் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள கேஜிஎப் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதால் அதன் இரண்டாவது பாகத்தை படக்குழு எடுத்துள்ளது இந்த திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தவகையில் கேஜிஎப் இரண்டாவது பாகத்தின் முன்பதிவு மூலம் இதுவரை முப்பத்தி ஒன்பது கோடி வசூல் கிடைத்துள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது பாலிவுட் சினிமாவில் முன்பதிவில் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ளது தென்னிந்திய சினிமா படங்கள். தெலுங்கில் இருந்து ஹிந்திக்கு டப் செய்யப்பட்ட பாகுபலி இரண்டாவது பாகம் வந்த பிறகு ஹிந்தி படங்களின் வியாபாரம் மற்றும் வசூல் அப்படியே பின்னுக்குுுத் தள்ளியது.

அதேபோல் தற்போது வெளியாகியுள்ள KGF இரண்டாவது பாகம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாகியது இந்த திரைப்படம் பாகுபலி இரண்டாவது பாகத்தின் முன்பதிவு சாதனையை முறியடித்துள்ளது பாலிவுட் சினிமா பிரபலங்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

பாலிவவுட் சினிமாவையே ஆட்டிப்படைத்த கேஜிஎப் திரைப்படம் வசூலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது. மேலும் பாகுபலி 2 கேஜிஎப் 2 ஆகிய திரைப்படங்கள் மூலம் தென்னிந்திய இயக்குனர்களும் தங்களது திறமையை நிரூபித்துள்ளார்கள்.

Leave a Comment