அதிரடியாக நிறுத்தப்பட்ட கேஜிஎப் 2.! எதனால் தெரியுமா.? ரசிகர்கள் அதிர்ச்சி

0
kgf 2
kgf 2

யாஷ் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் கேஜிஎப், இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பாக்ஸ் ஆபீசில் வசூல் சாதனை படைத்தது.

கே ஜி எஃப் முதல் பாகம் வெற்றி பெற்றதை அடுத்து இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்து படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வந்தது, கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தில் சஞ்சய்தத் வில்லனாக நடித்து வந்தார், இவரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது.

இந்த நிலையில் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது, கேஜிபி இரண்டாம் பாகம் சூட்டிங் திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது, கோலார் தங்க வயலில் குறிப்பிட்ட இடத்தில் செட் அமைக்கப்பட்டு சூட்டிங் நடைபெற்று வந்தது. படத்திற்காக போடப்பட்ட அந்த செட் மலையில் அதிக சேதத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறி அந்த பகுதியை சேர்ந்த ஸ்ரீநிவாஸன் என்பவர் வழக்கை தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கை விசாரித்த JMFC கோர்ட் கேஜிஎப் இரண்டாம் பாகத்தை நிறுத்தி தயாரிப்பாளருக்கு அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது, இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஏனென்றால் கே ஜி எஃப் இரண்டாம் பாகம் ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பில் இருக்கிறது இந்தநேரத்தில் இதுபோல் நடைபெற்றதால் ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.