RRR படத்தின் வசூலை ஓவர்டேக் செய்த “KGF 2”.? எவ்வளவு கோடி வித்தியாசம் தெரியுமா.?

அண்மைகாலமாக பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருப்பதால் ரசிகர்கள் பார்த்து கொண்டாடுகின்றனர் அதன் காரணமாக அந்த படங்கள் மிகப்பெரிய வசூல் வேட்டை அள்ளுகிறது.

அந்த வகையில்  RRR படத்தை தொடர்ந்து பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவான கேஜிஎப் 2 திரைப்படம். ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. 100 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் எதிர்பார்க்காத அளவிற்கு வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

அதே சமயம் நல்ல விமர்சனத்தையும் பெற்றுள்ளதால் கன்னட சினிமாவையும் தாண்டி இந்திய அளவில் இந்த திரைப்படம் மிகப்பெரிய ஒரு வசூலை அள்ளி வருகிறது. உலக அளவில் இதுவரை கேஜிஎப் 2 திரைப்படம் 1155 கோடி அள்ளி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று வரையிலும் இந்த படத்திற்கான மவுசு அதிகரித்த வண்ணமே இருப்பதால் இன்னும் வருகின்ற நாட்களில் நல்ல வசூலை அள்ளி சுமார் 1300 கோடி வசூல் செய்யும் என்பதே ரசிகர்களின் கணிப்பாக இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் கேஜிஎப் 2 படத்திற்கு முன்பாக வெளியான  RRR படம் இதுவரை 1150 கோடி தான் வசூல் செய்தது அதற்கு பின் வந்த கேஜிஎஃப் 2 5 கோடி அதிகமாக வசூலித்து முந்தி உள்ளது.

இதுவரை கே ஜி எஃப் 2 1155 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. கேஜிஎப் 2 திரைப்படம் அமேசான் பிரைம் OTT தளத்தில் மே 27ஆம் தேதி படம் ரிலீஸ் என்ற தகவல்கள் உலா வருகின்றன. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஆனால் இணையதள பக்கத்தில் இச்செய்தி வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment