தமிழ் ரசிகர்களை கடுப்பாக்கிய KGF-2 படகுழு.! அடப்பாவிகளா அதுக்குன்னு ஆரம்பத்திலேயே இவ்வளவு பெரிய மிஸ்டேக்கா..!

கனட சினிமாவையே தூக்கி நிறுத்திய திரைப்படம் என்றால் கேஜிஎப் திரைப்படம் தான் ஏனென்றால் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிய திரைப்படம் கேஜிஎப்  இந்த திரைப்படத்தின் முதல் பாகம் மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியாகியது ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

வசூல் ரீதியாக 200 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்துள்ளது அதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க படக்குழு முடிவு செய்தார்கள் இந்த நிலையில் தற்போது மூன்று வருடங்களுக்குப் பிறகு KGF இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது. முதல் பாகத்தை போல் மிகவும் விறுவிறுப்பாக  இரண்டாவது பாகத்தையும் இயக்கி உள்ளார் பிரசாந்த் நீல்.

மேலும் இந்த இரண்டாவது பாகம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது அந்த அளவு படத்தைப் பற்றி ரசிகர்கள் நல்ல விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் வசூலிலும்  பிரமாண்ட இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை பற்றி ஒரு புதிய தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பொதுவாக படத்தின் கதையோ அல்லது டைட்டில்தான் சர்ச்சையை சந்திக்கும் ஆனால் இந்த முறை டைட்டிலில் இடம்பெற்றுள்ள ஸ்பெல்லிங் மிஸ்டேக் தான் பேசு பொருளாக ஆகி விட்டது. அதாவது KGF இரண்டாம் பாகத்தின் டைட்டிலை சப்டர் டூ என்ற சொல்லுக்கான தமிழ் எழுத்து தவறாக இடம்பெற்றுள்ளது சே என்ற வார்த்தை இல்லாமல் உச்சரிக்க முடியாத அளவிற்கு உள்ளது.

இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது பொதுவாக திரைப்படங்களை பொறுத்தவரை சப்டைட்டில் இடம்பெறும் வசனங்கள் யூடியூபில் வெளியாகும் தமிழ் எழுத்து வீடியோக்கள் போன்றவற்றில் தமிழ் எழுத்துக்கள் தவறாக அமைவது தொடர்கதையாக இருந்து வருகிறது இதுவும் மிகப்பெரிய தவறு என்றுதான் கூறவேண்டும் இவ்வளவு கவனக்குறைவாக படக்குழு இருந்துள்ளார்கள் என்பதை பார்த்தால் மிகவும் கேவலமாக இருக்கிறது.

kgf mistake
kgf mistake

பான் இந்தியா என சொல்லிக் கொள்ளும் ஒரு படத்தின் டைட்டிலிலேயே எவ்வளவு பெரிய மிஸ்டேக் இருப்பது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது கோடிக்கணக்கான தமிழ் மக்கள் பார்க்கும் திரைப்படத்தின் டைட்டில் இப்படி பிழையாக இருக்கலாமா எனவும் சமூகவலைதளத்தில் கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.   தமிழில் வெளியிட்டு கோடிக்கணக்கில் லாபம் பார்க்கும் அவர்கள் தமிழ் தெரிந்தவர்களை வைத்து சரி பார்த்த பின்னே படத்தை ரிலீஸ் செய்து இருக்க வேண்டும்.

kgf title
kgf title

இப்படி கவனக்குறைவாக ரிலீஸ் செய்தது ஏன் என ரசிகர்கள் பெரிதாக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment