உலக சினிமாவையே கதிகலங்க வைக்கும் கேஜிஎப் 2..! ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவிட்ட டீசர் வெளியீட்டு தேதி..!

kgf 2 movie teaser release date : கடந்த 2018 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளிவந்து மெகா ஹிட்டடித்த திரைப்படம்தான் கேஜிஎஃப். இந்த திரைப்படம் கன்னடம் மட்டுமல்லாமல் பல்வேறு மொழிகளில் வெளிவந்து இந்திய சினிமாவையே அதிர வைத்து விட்டது.

இந்த திரைப்படம் முழுக்க முழுக்க சுரங்கத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மிகவும் அற்புதமாக இருப்பது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் சீனா உள்ளிட்ட வேற்று நாடுகளில் வசூலில் சாதனை பெற்றுள்ளது.

இந்த திரைப்படத்தில் முதல் பாகத்தை ரசிகர்கள் மறக்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.  இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என ஆவலுடன் இருந்த ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தியை படக்குழுவினர்கள் வெளியிட்டுள்ளார்கள்

சமீபத்தில் தான் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இணையத்தில் அலறவிட்ட இந்நிலையில் இந்த பிரமாண்டமான திரைப்படத்தின் டீசர் ஆனது வருகின்ற ஜூலை மாதம் 29 ஆம் தேதி காலை 10 மணி அளவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

kgf-2
kgf-2
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment