இணையதளத்தில் கசிந்தது KGF-2 செகண்ட் லுக் போஸ்டர்.! வைரலாகும் புகைப்படம்

கடந்த 2018 ஆம் ஆண்டு கடைசியில் அறிமுக நடிகர் யாஷ் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் கேஜிஎப்இந்த திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது, அதாவது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இந்தநிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்கள் படக்குழு, கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தை இந்த வருடம் கோடை விடுமுறையில் வெளியிட இருக்கிறார்கள், முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் இரண்டாம் பாகத்திற்கு விண்ணை முட்டும் அளவிற்கு எதிர்பார்ப்பு இருக்கிறது.

கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தின் செகண்ட் லுக் நாளை வெளியாக இருக்கிறது இதற்காக பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள், இந்தநிலையில் கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இணையதளத்தில் லீக் ஆகி விட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

அதுமட்டுமில்லாமல் கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் செகண்ட் லுக் ஒரு போஸ்டரும் உலா வருகிறது தற்போது அந்த போஸ்டரை ரசிகர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த போஸ்டர்

Leave a Comment