பீஸ்ட் திரைப்படத்தை தும்சம் செய்யுமா KGF-2..? வெளியானது திரைவிமர்சனம்.!

kgf 2 review
kgf 2 review

கனட நடிகர் யாஷ் நடிப்பில் வெளியாகி திரைப்படம்தான் கேஜிஎஃப் இந்த திரைப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார் இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படம் வெற்றி பெற்றதால் தற்போது இரண்டாவது பாகத்தை  எடுத்துள்ளார்கள் படக்குழு.  கேஜிஎப் படத்தின் முதல் பாகத்தில் தங்க சுரங்கத்தை தன்னுடைய கையில் வைத்திருந்த கருடனை கொலை செய்துவிட்டு ராக்கி என்ற ராக்கி பாய் அதனை கைப்பற்றினார் அதன் தொடர்ச்சி தான் இரண்டாம் பாகம்.

கேஜிஎஃப் இல் அடிமையாக இருந்த மக்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அவர்களுக்கு நல்லது செய்து வருகிறார் ராக்கி பாய். கே ஜி எஃப் பிடிப்பதற்காக ஆசைப்பட்டு முன் வந்தவர்கள் யாஷை கொலை செய்யத் திட்டம் இடுகிறார்கள். அதேபோல் இறந்து விட்டதாக கருதப்பட்ட சஞ்சய்தத் கேஜிஎப்-யை கைப்பற்ற அவருடைய படைவீரர்களுடன் வருகிறார் எதிரிகளை எப்படி சமாளிக்கிறார் யாஷ். ஒரு கட்டத்தில் ராக்கி பாயை சஞ்சய் தத் கொள்வது போல் காட்டுகிறார்கள்அதன் பிறகு மீண்டும் ராக்கி பாய் வருகிறார். அப்பொழுது திரையரங்கில் விசில் பறக்கும். மேலும்   கே ஜி எஃப் ஐ எப்படி தக்க வைத்துக் கொள்கிறார். சஞ்சய் தத்தின் நிலைமைதான் என்ன என்பது படத்தின் மீதிக்கதை .

இந்த திரைப்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் யாஷ் தனி ஒருவனாக படத்தை தனது தோள்மேல் சுமந்த் உள்ளார் அனைவரின் மனதிலும் மாஸ் ஹீரோவாக குடி போய்விட்டார். முதல் பாகத்தில் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து விட்டோம் அதனால் இரண்டாவது பாகத்தில் லேசாக நடித்தால் போதும் என நினைக்காமல் இரண்டாவது பாகத்திலும் தன்னுடைய முழு நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தி மீண்டும் ராக்கி பாய் ராக் என நிரூபித்து விட்டார்.

யாஷ் அலட்டல் இல்லாமல் நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு மிகப் பெரிய பலத்தை தேடியுள்ளார் அதுமட்டுமில்லாமல் நாயகியாக நடித்துள்ள ஸ்ரீநிதி செட்டி தன்னுடைய முழு நடிப்பையும் வெளிப்படுத்தி ரசிக்க வைத்துள்ளார். வில்லனாக வந்த சஞ்சய் தத்  கொடூர வில்லனாக மிரட்டியுள்ளார் அவருடைய பார்வையும் கெட்டப்பும் அனைவரையும் மிரள வைக்கிறது அதேபோல் அரசியல் தலைவராக ரவீனா டாண்டன் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

முதல் பாகத்தை விட இரண்டு மடங்கு மாசாக உருவாகியுள்ள KGF 2  இரண்டாவது பாகம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு காட்சியையும் பிரசாந்த் நீல் விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளார். அழுத்தமான வசனம் ஆர்ப்பரிக்கும் சண்டைக்காட்சிகள் என படத்திற்கு தேவையான அனைத்தையும் ரசிகர்கள் ரசிக்கும் படி உருவாக்கியுள்ளார்கள்.

அதேபோல் படத்திற்கு மிகப்பெரிய பலமாக சண்டைக்காட்சிகளில் அன்பறிவு காட்டியுள்ளார்  படத்திற்கு ரவி பஸ்ரூன் இசையும் பின்னணி இசையும் மிரட்டி உள்ளார்கள், 19 வயதிலேயே உஜ்வால் எடிட்டிங்கில் மிரட்டியுள்ளார்.

மொத்தத்தில் கே ஜி எஃப் 2 பக்கா மாஸ் ஆக்ஷன் திரைப்படம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.