3வது வாரத்திலும் தமிழகத்தில் வசூல் குறையாத “கேஜிஎப் 2” திரைப்படம்.! எத்தனை கோடி தெரியுமா.?

தமிழ் ரசிகர்கள் தொடர்ந்து மற்ற மொழி திரைப்படங்களுக்கும் தங்களது நல்ல ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பிரசாந்த் நில் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் ஏப்ரல் 14ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் கே ஜி எஃப் 2.

இத்திரைப்படத்தின் முதற்பாகம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது பாகம் உருவாக்கப்பட்டது. எனவே இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நாளில் இருந்து ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்தது.  இவ்வாறு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வந்தாலும் அதனை பூர்த்தி செய்யும் வகையில் இத்திரைப்படம் அமைந்துள்ளது.

இவ்வாறு விமர்சனமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வசூல் மழையும் கொட்டிய வண்ணம் இருந்து வருகிறது. இத்திரைப்படம் கன்னடம், தெலுங்கு, தமிழ்,மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகி வசூல் சாதனையை படைத்து வருகிறது. இரண்டு வாரங்கள் கடந்தும் திரையரங்குகளில் கேஜிஎப் திரைப்படத்தை பார்த்து வருவதால் கூட்டம் குறையவில்லை.

இவ்வாறு திரைப்படம் ஐந்து மொழிகளிலும் வெளியானதால் மற்ற படங்கள் அனைத்தும் இந்த திரைப்படம் கொடுத்து வருகிறது.  இவ்வாறு இத்திரைப்படம் பல சாதனைகள் படைத்துள்ள நிலையில் அதிவேகமாக 250 கோடி ரூபாயை வசூல் செய்த படம் என்ற முக்கிய மையக்கல்லை எட்டியுள்ளது.

இவ்வாறு நேற்றைய நிலவரத்தின்படி இத்திரைப்படம் ரூபாய் 360 கோடியை தாண்டி உள்ளதாகவும் வெள்ளிக்கிழமை 5 கோடியும், சனிக்கிழமை 7 கோடியும், ஞாயிற்றுக்கிழமை 9 கோடியும் வசூல் செய்துள்ளது. இவ்வாறு டங்கல்,பாகுபலி 2, ஆர் ஆர் ஆர் ஆகிய படங்களை தொடர்ந்து உலக அளவில் ரூபாய் ஆயிரம் கோடி வசூலை பெற்ற நான்காவது இந்திய படமாக கேஜிஎஃப் இரண்டாம் பாகம் இடம்பெற்றுள்ளது

இவ்வாறு மூன்றாவது வாரமாக ஒளிபரப்பாகிவரும் இத்திரைப்படம் தமிழில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.  எனவே இனிவரும் நாட்களிலும் இத்திரைப்படம் ஒளிபரப்பாகி வரும் எனவே 100 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment