தல அஜித்தை வைத்து உருவாக்கப்பட்ட கேஜிஎப் 2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.? அஜித் ரசிகர்களின் வெறித்தனம் இதுதான்

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யாஷ் இவர் நடிப்பில் சில வருடத்திற்கு முன்பு வெளியாகிய திரைப்படம் கேஜிஎப் இந்தத் திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது, அதுமட்டுமில்லாமல் பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசித்துப் பார்த்த திரைப்படமாகும்.

மேலும் கேஜிஎப் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாக மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது, இப்பொழுதும் இந்த திரைப்படத்தை டிவியில் ஒளிபரப்பினால் தொலைக்காட்சியின் டிஆர்பி ரேட்டிங் எகிறிவிடும் அந்த அளவு பல ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் பிடிக்கும்.

இந்த நிலையில் கேஜிஃஎப் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை படக்குழு உருவாக்கி வந்தார்கள், இந்த திரைப்படம் கொரோன ஊரடங்கு முடிந்தவுடன் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளார்கள், அதுமட்டுமில்லாமல் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகவும் மிரட்டல் ஆகவும் தத்ரூபமாகவும் இருக்கும் என நெருங்கிய வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

கேஜஎப் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்று அமைந்துள்ளது, அதுவும் ஆதிரா என்ற கதாபாத்திரம் தான் இந்த கதாபாத்திரத்தில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக சஞ்சய் தத் நடித்துள்ளார். இந்தநிலையில் கேஜிஎப் 2 இரண்டாம் பாகத்தில் இருந்து ஆதிரா கதாபாத்திரத்தின் மிரட்டலான போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது

பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த அஜித் ரசிகர்கள் ஆதிரா கதாபாத்திரத்தின் மிரட்டலான போஸ்டரில் அஜித் வெர்சனை உருவாக்கியுள்ளார்கள் அந்த புகைப்படம் இணையதளத்தில் பரவி வேகமாக வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் கேஜிஎப் இரண்டாம் பாகத்தில் அஜித் இருந்தால் எப்படி இருக்கும் என இந்த புகைப்படத்தின் மூலம் சிந்திக்க வைத்து விட்டார்கள்.

Leave a Comment