பாகுபலி படத்தின் வசூலை பந்தாட காத்திருக்கும் கேஜிஎப் 2.! மூன்று நாட்களில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் ஏற்கெனவே வெளிவந்த சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கே ஜி எஃப். முதல்பாகம் எதிர்பாராத அளவிற்கு அதிரிபுதிரி ஹிட் அடித்த காரணத்தினால் அதன் இரண்டாவது பாகம் அதிரடியாக உருவானது ஆனால் தொடர்ந்து பல்வேறு தடைகளை சந்தித்ததால் இரண்டு வருடங்கள் கழித்து கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி உலக அளவில் ரிலீசானது.

கேஜிஎப் 2 திரைப்படத்தை எதிர்த்து தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படமும் வெளியானது ஆனால் பிரசாந்த் நீல் இந்த திரைப்படத்தை தனக்கே உரிய பாணியில் ஆக்சன், சென்டிமெண்ட் கலந்த திரைப்படமாக எடுத்து இருந்தால் தான் இந்த திரைப்படம் பீஸ்ட் படத்தை முந்திய தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.

குறிப்பாக இந்த படம் அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது தான் ஹைலைட் என கூறப்படுகிறது. கே ஜி எஃப் 2 திரைப்படம் வெளியான முதல் நாளில் மட்டுமே 133 கோடி வசூல் செய்த நிலையில் அடுத்தடுத்த நாட்களிலும் நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது.

மூன்று நாட்கள் மட்டுமே ஆன நிலையில் கேஜிஎப் 2 திரைப்படம் இதுவரை 410 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் உலா வருகின்றன. இப்படியே போய்க்கொண்டிருந்தால் கேஜிஎப் திரைப்படம் புதிய சாதனைகளை படைத்து பல்வேறு முக்கிய நடிகர்களின் படங்களின் வசூல் சாதனையை முறியடிக்கும் என கூறப்படுகிறது.

அதன்படியே தெலுங்கு சினிமாவில் பிரமாண்ட பட்ஜெட் படங்களை இயக்கி வெற்றி கண்டு வரும் ராஜமௌலி. இவர் இயக்கிய பாகுபலி படத்தின் வசூல் சாதனையை கேஜிஎப் 2 திரைப்படம் முறை  அடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. பாகுபலி திரைப்படம் மொத்தமாகவே 650 கோடி தான் வசூல் செய்தது அதை ஈசியாக கே ஜி எஃப் 2 திரைப்படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment