பாகுபலிக்கு தண்ணிகாட்டிய கே ஜி எஃப் 2. ஒட்டு மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா..

படம் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஆக்ஷன் காமெடி செண்டிமெண்ட் கலந்து இருக்கும் திரைப்படத்தை ரசிகர்கள் எப்போதுமே கொண்டாடி தீர்ப்பார்கள் அதுவும் தனது சொந்த மொழி படத்தையும் தாண்டி பிற மொழி படங்களாக இருந்தாலும் பிடித்து விட்டால் அவ்வளவுதான் கொண்டாடி தீர்ப்பது வழக்கமாக வைத்திருப்பார்கள்.

அந்தவகையில் தமிழ்நாட்டு ரசிகர்கள் பிற மொழிகளான தெலுங்கு கன்னடம் ஹாலிவுட் பாலிவுட் என எந்த மொழியான படங்களையும் கொண்டாடுவார்கள். அந்த வகையில் அண்மைக்காலமாக கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர் அதற்கேற்றார்போல சிறப்பான படங்களையும் கொடுத்து வருகின்றனர்.

அண்மையில் வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் எதிர்பார்க்காத அளவிற்கு பிரம்மாண்ட வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது இதுவரை நல்ல வரவேற்பை பெற்று வசூலில் அடித்து நொறுக்கி வருகிறது இதேபோல இந்த திரைப்படத்திற்கு முன்பாக ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அடித்து நொறுக்கியது.

குறிப்பாக பாகுபலி1 சுமார் 650 கோடிக்கும் மேல் வசூல் செய்து புதிய சாதனை படைத்தது இந்த படத்தின் சாதனையை தற்போது முறியடித்துள்ளது கே ஜி எஃப் 2. இதுவரை கே ஜி எஃப் 2  700 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் உலா வருகின்றன. கன்னட சினிமாவில் உருவான கே ஜி எஃப் 2 தற்பொழுது இப்படி ஒரு பிரமாண்ட வசூலை முறியடித்து உள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

சொல்லப்போனால் இந்த படம் இன்னும் நிறைய வசூலை அள்ளி பல படத்தின் சாதனையை முறியடிக்கும் எனவும் கருதப்படுகிறது ஏனென்றால் படம் வெளிவந்த குறைந்த நாட்களிலேயே 700 கோடியை தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Exit mobile version