போட்டி போட்டி தான்ஆனாலும் KGF-2 இயக்குனர் மற்றும் beast இயக்குனர் என்ன செய்துள்ளார்கள் பார்த்தீர்களா.! வைரலாகும் பதிவு.

தளபதி விஜய் நடிப்பில் வருகின்ற ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் பீஸ்ட் திரைப்படம் வெளியாக இருக்கிறது இந்த திரைப்படத்தை நெல்சன் டிலிப்குமர் தான் இயக்கி உள்ளார் அதேபோல் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.  மேலும் ஏப்ரல் 14ஆம் தேதி பிரசாந்த் நீல் இயக்கத்தில் KGF  இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா திரைப் படமாக வெளியாக இருக்கிறது. நிலையில் கேஜிஎப் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை நிலைநாட்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள் அதேபோல் பீஸ்ட்  திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் எனவும் கூறி வரும் நிலையில் படத்தின் டிரைலரை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது kgf படக்குழு.

kgf  படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வைரலானது இந்த ட்ரைலரை பார்த்த நெல்சன் திலிப்குமர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் kgf இயக்குனர் பிரசாந்த் நீல் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதைப்பார்த்த பிரசாந்த் நீல் நன்றி என கூறிவிட்டு விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தை திரையில் காண மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் என கூறி வாழ்த்து கூறியுள்ளார். பீஸ்ட் மற்றும் கே ஜி எஃப் இரண்டாம் பாகம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் வசூல் அளவில் மிகப்பெரிய போட்டியாக இருந்தாலும் இரண்டு படங்களின் இயக்குனர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்கூறி கொண்டது ரசிகர்களிடையே உற்சாகத்தை கொடுத்துள்ளது.

https://twitter.com/prashanth_neel/status/1508469358573469697?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1508469358573469697%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiaglitz.com%2Fnelson-and-prasanth-neel-congrats-one-to-another-for-success-tamilfont-news-310511

Leave a Comment