பட வாய்ப்பு கிடைக்காததால் அடிமட்ட லெவலுக்கு இறங்கிய கீர்த்தி சுரேஷ்.! புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்…

தமிழ் சினிமாவில் முன்னானி நடிகைகளில் ஒருவர் திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் மலையாள சினிமாவில் வெளியான பைலட்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அதன் பிறகு தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் மூன்று படத்தில் நடித்து பிரபலமான நடிகை கீர்த்தி சுரேஷ்.

பின்னர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அதன் பிறகு தொடர்ந்து தொடரி, ரெமோ, பாம்பு சட்டை, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், என பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களுக்கு தமிழில் சரியான பட வாய்ப்புகள் அமையாததால் தெலுங்கு பக்கம் திரும்பி இருக்கிறார். அந்த வகையில் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான சர்காரு வாரி பட்டா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது மாமன்னன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படபிடிப்பு விறுவிருப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படத்தில் பிஸியாக இருந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

பட வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது விளம்பரத்திலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் கழுத்து நிறைய தங்கம் அணிந்துகொண்டு ஜுவல்லரி நிறுவனத்திற்கு விளம்பரம் செய்து உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் விரலாக்கி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்…

 

keerthi suresh
keerthi suresh

Leave a Comment