பார்ட்டியில் முகம் சுளிக்க வைக்கும் வகையில் ஆட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்.! என்ன இப்படி மாறிட்டாங்க..

Keerthy suresh photos viral : தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நாயகி கீர்த்தி சுரேஷ்.  இவர் தமிழில் இது என்ன மாயம் என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் முதல் படம் சுமாராக ஓடினாலும் இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. ஆரம்பத்தில் படங்களில் இழுத்துப் போட்டுக் கொண்டு நடித்திருந்த கீர்த்தி சுரேஷ்.

அண்மைக்காலமாக படத்தின் தேவைக்காக கிளாமர் காட்டி நடித்து ஓடுவதால் இவருக்கு ரசிகர்கள் அதிகமாக அதோடு மட்டுமல்லாமல் வாய்ப்புகளும் குவிந்த வண்ணமே இருக்கின்றன கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மாமன்னன், தசரா போன்ற படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து கைவசம் ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன.

ரகு தாத்தா, சைரன், கன்னி வெடி, ரிவால்வர் ரீட்டா மற்றும் பாலிவுட் ஒரு படம் பண்ணி வருகிறார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் நயன்தாராவையே பீட் பண்ணி தற்போது அதிக படங்களை அள்ளி ஓடிக்கொண்டிருக்கிறார். கீர்த்தி சுரேஷ் தற்பொழுது ஒரு படத்திற்கு 3 கோடியிலிருந்து 5 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

பிரபலமான நடிகையான கீர்த்தி சுரேஷ் சோசியல் மீடியாவில் மிக அக்டிவாக இருந்து வருகிறார். தொடர்ந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடுவது ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்து உள்ளார். இந்த நிலையில்  பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார்.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சில இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் முன்னணி நடிகை மாதிரி நடந்துக்கோங்க.. இப்படியா ஆட்டம் போடுறது என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ கீர்த்தி சுரேஷ் பார்ட்டியில் இருந்த போது எடுக்கப்பட்ட அந்த அழகிய புகைப்படங்களை நீங்களே பாருங்கள்..

Keerthy Suresh
Keerthy Suresh