புகைப்படத்தை வெளியிட்டு மெஸ்ஸி -க்கு வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ்.! கொண்டாடும் கால்பந்து ரசிகர்கள்..

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருவர் கீர்த்தி சுரேஷ். ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் ஒரு கட்டத்தில் பருவ வயதை எட்டிய பிறகு ஹீரோயின்னாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். முதலில் மலையாளத்தில் ஒன்று, இரண்டு படங்களில் நடித்த இவர் திடீரென தமிழ் பக்கம் திசை திரும்பினார்.

முதலில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து இது என்ன மாயம் திரைப்படத்தில்  நடித்து வெற்றி கண்டார். அதனைத் தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்தது. அதில் ஒவ்வொன்றிலும் தனது திறமையை வெளிக்காட்டி வெற்றியை குவித்தார். ஒரு சமயத்தில் உச்ச நட்சத்திர நடிகர்களான விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம் போன்ற நடிகர்களுடன்..

நடித்து  தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தார். மேலும் ரசிகர்களையும் கவர்ந்து இழுக்க தனது சமூக வலைதள பக்கத்தில் வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு அசத்தினார். இப்படி ஓடிக் கொண்டிருக்கும் இவர் நேற்று நடந்த முடிந்த  FIFA கால்பந்து இறுதிப்போட்டி குறித்து பதிவிட்டு உள்ளார். அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸி தான்.. அவர் தான் முக்கிய நேரத்தில் சில கோல்களை அடித்து அசத்தினார். இந்த வெற்றியை தற்போது பலரும் கொண்டாடி வருகின்றனர். மேலும் அர்ஜென்டினா அணிக்கும் மற்றும் மெஸ்ஸி -க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ்..

தனது சமூக வலைதள பக்கத்தில் மெஸ்ஸி இது உங்களுடைய நாள் என்றும்.. மிகப்பெரிய ஒரு வெற்றியை பெற்று வரலாற்றை உருவாக்கி உள்ளீர்கள் எனக் கூறி கீர்த்தி சுரேஷ் பதிவிட்டு இருக்கிறார். அந்த போட்டியை பார்த்த புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார் கீர்த்தி சுரேஷ். இவர் மெஸ்ஸியின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடதக்கது.

keerthy suresh
keerthy suresh
keerthy suresh
keerthy suresh

Leave a Comment