இழுத்துப் போர்த்தியது போதும்.. தெலுங்கு பட விழாவிற்கு கவர்ச்சியாக வந்த “கீர்த்தி சுரேஷ்”.. வைரலாகும் புகைப்படம்

Keerthy suresh : தென்னிந்திய சினிமா உலகில் இன்று முன்னணி நடிகையாக வருவர் கீர்த்தி சுரேஷ். இவர் மலையாள படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்து தற்பொழுது தமிழ், தெலுங்கு என பல  மொழிகளில் கொடி கட்டி பறந்து வருகிறார். தமிழ் சினிமாவில் கீர்த்தி சுரேஷ் அறிமுகமான சில வருடங்களிலேயே டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க தொடங்கிவிட்டார்.

அந்த வகையில் இவர் சிவகார்த்திகேயன், விக்ரம், தனுஷ், விஜய், சூர்யா, ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து மார்க்கெட்டை பிடித்தார்.  கடைசியாக கூட  தமிழில் உதயநிதி நடிப்பில் வெளிவந்த மாமன்னன் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயின்னாக நடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் சோலோ திரைப்படங்களிலும் நடித்து வெற்றி கண்டு வருகிறார். அந்த வகையில் miss india, penguin மற்றும் மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று கதையை வைத்து மகாநடி என்னும் திரைப்படத்தை தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் நாக் அஸ்வின் இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடித்து பல பாராட்டுகளையும் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றவர். இப்படி டாப் ஹீரோ  படங்கள் மற்றும் சோலோ படங்களில் பிஸியாக நடித்து ஓடிக்கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் ரசிகர்களை கவரத் தொடர்ந்து சோசியல் மீடியாவில் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்..

அந்த வகையில் சமீபத்தில் ஒரு தெலுங்கு பட விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் வேற லெவல்.. செம்ம அழகு.. என கூறி கமெண்ட் அடித்து லைக்களை தட்டி வீசி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள்.

keerthy suresh
keerthy suresh
keerthy suresh
keerthy suresh

Leave a Comment