விஜய், அனிருத் யாரும் கிடையாது தன்னுடைய 13 வருட காதலரை அறிமுகப்படுத்திய கீர்த்தி சுரேஷ்.! வைரல் வீடியோ..

0

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமாகி பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஏராளமான மொழி திரைப்படங்கள் நடித்து தற்பொழுது முன்னணி நடிகை என்ற அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, விக்ரம் என ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலம் அடைந்த இவர் ஒரு கட்டத்தில் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடித்து வந்ததார் சமீப காலங்களாக இவருக்கு பெரிதாக தமிழ் திரைப்படங்கள் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை மேலும் ஹீரோக்களுக்கு ஜோடியாக மட்டுமல்லாமல் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் கடைசியாக சாணிக் காகிதம் திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இவ்வாறு இவருக்கு சினிமாவில் மார்க்கெட் குறைந்து வருவதால் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்பொழுது இவர் இசையமைப்பாளர் அனிருத் அவர்களை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும் வதந்திகள் வெளிவந்த நிலையில் இதனை அடுத்து தற்பொழுது நடிகர் விஜய் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகிய பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த 13 வருடங்களாக ஒருவரை காதலித்து வருகிறாராம் இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார். அதாவது அவர் கூறியதாவது, கீர்த்தி சுரேஷ் நெருங்கமான குடும்ப நண்பர் ஒருவரிடம் இது பற்றி கேட்டபொழுது அவர் பள்ளி பருவத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் ஒருவரை காதலித்து வருவதாகவும் அவருடன் தான் இரு வீட்டார் சம்பந்தத்துடன் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதனை அடுத்து பல இடங்களில் ரிசார்ட் வைத்திருக்கும் நபர் தான் கீர்த்தி சுரேஷ் காதலர் என்றும் அவரை விஜய்க்கு கீர்த்தி சுரேஷ் அவர்கள் அறிமுகப்படுத்தி இருப்பதாகவும் பிறகு விஜய் கீர்த்தி சுரேஷின் காதலரின் பிறந்தநாள் கூட வாழ்த்து தெரிவித்து இருந்தாராம். அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அந்த நபர் என்னிடம் காட்டியுள்ளார் என பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியுள்ளார். இதனை அடுத்து இன்னும் நான்கு வருடங்கள் கழித்து தான் தன்னுடைய காதலரை கீர்த்தி சுரேஷ் கரம் பிடிப்பார் எனவும் பிஸ்மி கூறிய தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.