புதிய வகையான கெட்டப் போட்டுக்கொண்ட கீர்த்தி சுரேஷ் இணையத்தில் வைரலாகும் முக்கியமான திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.!

தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தான் கீர்த்தி சுரேஷ் இவர் அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் என்ற திரைப்படத்தில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்ததால் இவருக்கு தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து கொண்டே போனது.குறிப்பாக பார்த்தால் இவர் விஜய்,சூர்யா,விஷால்,விக்ரம்,தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து.

ஒரு சில வருடங்களிலேயே தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துவிட்டார் மேலும் இவரது நடிப்பில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் தான் நடிகையர்-திலகம் இந்தத் திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வாங்கினார்.

தற்பொழுது இவர் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்தத் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது அதனை தொடர்ந்து பார்த்தால் இயக்குனர் செல்வராகவனுடன் சாணிக்காகிதம் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

keerthi suresh
keerthi suresh

மேலும் 100 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் மரக்காயர் படத்தின் கீர்த்தி சுரேஷின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்து வருவது மட்டுமல்லாமல் பலரும் இதனைப் பார்த்துவிட்டு கீர்த்தி சுரேஷை கலாய்த்து வருகிறார்கள் பார்ப்பதற்கு இவரது கெட்டப் மக்களுக்கு பிடிக்கவில்லை என்பது போல் தெரிகிறது.

Leave a Comment