தமிழ் சினிமாவில் எப்பொழுதும் கேரளாவிலிருந்து வரும் நடிகைகளுக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும், அன்று முதல் இன்று வரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் முக்கால்வாசிப்பேர் கேரளாவில் இருந்து வந்தவர்கள்தான்.
அந்தவகையில் கேரளாவில் இருந்து வந்தவர்களில் கீர்த்தி சுரேஷும் ஒருவர், சினிமா வாரிசுகளான இவர் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், அதன்பிறகு சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் என்ற திரைப்படத்தின் மூலம் நடித்து பிரபலம் அடைந்தார்.
இந்த திரைப்படத்தில் என் செல்லக்குட்டி உன்ன காண என்ற பாடல் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது, அதன்பிறகு டாப் கீர் போட்டு தூக்குவது போல் ஒரேடியாக முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து வந்தார், பழம்பெரும் நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் தனக்கான முத்திரையைப் பதித்தார்.
தற்பொழுது கீர்த்தி சுரேஷ் பாலிவுட் வரை சென்றுள்ளார் இந்த நிலையில் இவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.