கீர்த்தி சுரேஷை அந்த மாதிரி நடிக்க அழைப்பு விடுத்த முன்னணி நடிகர்.. வேணாம் என உதறித் தள்ளிய நடிகை..

0

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் வெளிவந்த ஏராளமான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. அதோடு தமிழில் ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார்.

இவ்வாறு தனது நடிப்பினால் சினிமாவிலும், ரசிகர்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவர் திடீரென்று தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறினார். இப்படிப்பட்ட நிலையில் எலும்பும் தோலுமாக இவர் மாறியதால்  ரசிகர்கள் வெறுத்தார்கள் அதோடு திரைப்படங்களிலும் நடிப்பதற்காக பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

கிடைத்த ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் தமிழில் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த மற்றும் சாணி காகிதம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இதனை தொடர்ந்து தெலுங்கில் நடிகர் நிதிவுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இத்திரைப்படங்களை தொடர்ந்து இவர் நடிகர் மகேஷ்பாபு ஜோடியாக நடிப்பதற்காக ஒரே ஒரு பட வாய்ப்பை மட்டுமே கைவசம் வைத்துள்ளார். எனவே தொடர்ந்து பட வாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காக தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

எனவே தற்போது கவர்ச்சியில் அதிக ஆர்வமுடையவராக திகழும்  கீர்த்தி சுரேஷ் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் கொஞ்சம் கிளாமராக இருக்கும் திரைப்படங்களின் கதையை கூறியுள்ளார்கலாம் ஆனால் கீர்த்தி சுரேஷ் வேண்டாம் என்று மறுத்துள்ளார். அதாவது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் இன்னும் பாலிவுட்டில் மட்டும் தான் நடிக்கவில்லை.

எனவே பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் படத்தில் இவருக்கு ஜோடியாக நடிப்பதற்கு கீர்த்தி சுரேஷ் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த திரைப்படத்தினை கதையைக் கூறும் பொழுது தயாரிப்பாளர் பிகினி உடை அணியவேண்டும் என்று கூறி உள்ளார்கள் எனவே கீர்த்தி சுரேஷ் இந்த திரைப்படத்தினை வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.