தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருபவரில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் முதலில் இது என்ன மாயம் திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அறிமுகமானார். பின்பு அவரது நடிப்பு திறமையின் மூலம் படி படியாக டாப் நடிகர்களான தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய், விக்ரம் போன்ற பலருடன் ஜோடி போட்டு நடித்து அசத்தினார்.
தற்போது இவர் ரஜினியுடன் அண்ணாத்த திரைப்படம் மற்றும் செல்வராகவனுடன் சாணி காயிதம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் இன்னும் இந்த இரு படங்களும் வெளிவரவில்லை. இது போக தற்போது இவர் தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் சர்காரு வாரி பட்டா மற்றும் சிரஞ்சீவியுடன் வேதாளம் பட ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடித்து வருகிறார்.
இவர் தனது இணையதள பக்கத்தில் தொடர்ந்து ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு வருவார். இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் புதிதாக கமிட்டாகியுள்ள தெலுங்கு திரைப்படத்தில் தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதன்படி இவர் இதுவரை நடித்து வந்த படங்களில் சுமார் ரூ 2.5 கோடி வரை சம்பளமாக வாங்கி வந்த இவர் தற்போது இனி நடிக்க இருக்கும் படங்களில் தனது சம்பளத்தை உயர்த்தி 3 கோடியாக கேட்க உள்ளாராம்.
நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவில் சிறந்த நடிகையாகவும் மற்றும் சோலோவாகவும் நடித்து வந்த இவர் இனி நடிக்க இருக்கும் படங்களில் தனது சம்பளத்தை உயர்த்தி 3 கோடியாக அல்லது அதற்கு மேல் தான் சம்பளம் வாங்குவார் எனக் கூறி வருகின்றனர்.