முக்கிய பிரபலத்தின் திரைப்படத்தில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷ்.! இதோ அவரே பகிர்ந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

0

தமிழ் திரையுலகில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பின்பு நிறைய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை புதிதாக உருவாக்கி வைத்திருக்கும் நடிகை தான் கீர்த்தி சுரேஷ் இவர் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் திரைப்படத்தில் நடித்து மக்களிடையே தனது முகத்தை பதிய வைத்தது மட்டுமல்லாமல் அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார்.

அதிலும் குறிப்பாக இவர் விஜயின் திரைப்படத்தில் நடித்தால் படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுப்பது மட்டுமல்லாமல் தமிழ் மூலம் பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் இவர் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் தற்பொழுது நடித்துள்ளார் இந்த திரைப்படம் மட்டுமல்லாமல் இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சாணி காகிதம் படப்பிடிப்பிலும் நடித்து வருகிறார்.

இவ்வாறு பிரபலமாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் அவ்வபோது தனது புகைப்படங்களையும் சமூக வலைதள பக்கங்களில் வெளியிடுவது வழக்கம்தான் இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார் அதில் சாணி காகிதம் படப்பிடிப்பில் கூடிய சீக்கிரம் கலந்துகொள்வதாக பதிவு செய்ததால் இவரது ரசிகர்கள் பலரும் ஒரே உற்சாகத்தில் தான் இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இவர் தெலுங்கிலும் ஒரு சில திரைப்படங்களில் கூடிய சீக்கிரம் நடிக்க போவதாக தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது இதனைப்பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவருமா என அவரது ரசிகர்கள் பலரும் கேட்டு வருகிறார்கள்.

keerthi suresh
keerthi suresh

ஒரு சில ரசிகர்கள் நீங்கள் கதாநாயகியாக நடிப்பதற்கு நிறைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது எங்களுக்கு மிகவும் பிடிக்கவில்லை அதிலும் குறிப்பாக நீங்கள் கிளாமரில் தாறுமாறாக வலம் வருகிறீர்கள் என கூறி வருகிறார்கள்.