அடுத்தடுத்து வெளியாக இருக்கிற படங்கள் அனைத்திலும் ஒரு மாதிரியான ரோலில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ்.? ஆச்சரியப்படும் சினிமா பிரபலங்கள்.

0

சினிமாவில் கீர்த்தி சுரேஷின் அம்மா பிரபலம் ஆகி இருந்ததால் கீர்த்திசுரேஷ் எடுத்த உடனேயே டாப் நடிகர்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் விக்ரம் பிரபுவுடன் ஜோடி சேர்ந்து  இது என்ன மாயம் என்னும் திரைப்படத்தில் நடித்தார்.

ஆரம்பத்தில் கொலுக்கு முழுக்கு என்று இருந்தாலும் போகப்போக சினிமா வாய்ப்பை கைப்பற்றி தனது உடல் எடையை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டார் அதற்கேற்றார்போல் கீர்த்தி சுரேஷ்க்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இந்த தடவை எப்படி என்றால் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், விக்ரம், சிவகார்த்திகேயன்  கை கோர்த்து நடித்ததால் இவர் தென்னிந்திய திரை உலகம் முழுவதும் பேசப்பட்டார்

. ஒரு கட்டத்தில் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பட வாய்ப்புகள் குவிந்தன அதனால் அம்மனி தற்போது பெரும்பாலும் அங்கேயும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் கையில் தற்போது பல்வேறு திரைப்படங்கள் இருக்கின்றன அதிலும் குறிப்பாகதங்கையாக 3 படத்தில் நடித்துள்ளார் அந்த மூன்று படங்களும் மிக விரைவிலேயே வெளிவர இருக்கிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது தங்கையாக நடித்து உள்ளது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது அதுவும் மூன்றும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. அந்த படம் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம். முதலாவதாக இயக்குனர் செல்வராகவன் நடிக்கும் படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கிறார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக அவர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. வேதாளம் திரைப்படம் தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததை தொடர்ந்து தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு உருவாகி வருகிறது. அதில் சிரஞ்சீவிக்கு தங்கைகாயாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.