வெறும் 500 ரூபாய் சம்பளம் வாங்கிய கீர்த்தி சுரேஷ்.. அடக்கொடுமையே இதுதான் முதல் சம்பளமா.? எந்த படத்தில் தெரியுமா.?

keerthi-suresh-latest
keerthi-suresh-latest

கீர்த்தி சுரேஷ் தற்போது பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார் இவரின் தந்தை ஒரு மலையாள திரைப்பட தயாரிப்பாளர், அதேபோல் அவரின் அம்மா ஒரு நடிகை என்பதால் இவருக்கு சிறு வயதிலிருந்து நடிப்பில் அதிக ஆர்வம் வந்துவிட்டது.

சில மலையாளத் திரைப்படங்களில் சைல்ட் ஆர்டிஸ்ட் ஆக நடித்து அசத்தினார் அதேபோல் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக அறிமுகமாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் சென்னையில் உள்ள பேரல் அகடமையில் தன்னுடைய பேஷன் டிசைனிங் படிப்பை முடித்தார்.

மலையாள இயக்குனர் பிரியதர்ஷினி இயக்கிய கீதாஞ்சலி என்ற திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து ரசிகர் மனதில் இடம் பிடித்தார். 2015 ஆம் ஆண்டு இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் எ எல் விஜய் அறிமுகப்படுத்தினார். முதல் திரைப்படம் இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய திரைப்படங்கள் வெற்றி கொடுத்தது.

அதேபோல் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான மகாநதி திரைப்படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார், விஜய், மகேஷ்பாபு, தனுஷ், விக்ரம் ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி தொழிலதிபர் ஆண்டனி என்கின்ற தன்னுடைய நீண்ட நாள் காதலரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகும் படங்களில் கவனம் செலுத்தி வரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இன்னும் பல திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன.

தற்பொழுது கீர்த்தி சுரேஷ் ஒரு திரைப்படத்திற்கு நான்கு முதல் ஐந்து கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார். ஆனால் இவர் முதன்முதலில் வாங்கிய சம்பளம் வெறும் 500 ரூபாய் தான். அதாவது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு பேஷன் ஷோவில் திரைக்குப் பின்னால் உதவியாளராக பணி புரிந்ததற்காக அவருக்கு 500 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது அந்த பணத்தை தனது தந்தையிடம் கொடுத்ததாக கூறியுள்ளார்.

தன்னுடைய தந்தையின் திரைப்படத்தில் நடித்ததால் எந்த ஒரு சம்பளமும் அவர் தரவில்லை ஆனால் அவர் வாங்கிய முதல் சம்பளம் இதுதான்.