முதல்முறையாக நீச்சல் உடையில் கீர்த்தி சுரேஷ்.? என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ் இவர் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிரபலமாக நடித்து வருகிறார். இந்தநிலையில் நீச்சல் உடையில் நடிப்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு முதனமுறையாக பதிலளித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவில் முதன்முறையாக குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமடைந்தவர் 2013ம் ஆண்டு கீதாஞ்சலி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு விக்ரம் பிரபுவுடன் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய ரஜினிமுருகன் திரைப்படத்தில் தன்னுடைய க்யூட் நடிப்பை வெளிப்படுத்தி அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றினார். சூர்யா, தனுஷ்,  விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

என்னதான் இவர் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவரை நடிக்க தெரியாது என பலரும் கலாய்த்து வந்தார்கள் இந்த நிலையில் தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துவந்த கீர்த்திசரேஷ் 2019ஆம் ஆண்டு வெளியாகிய மகாநதி என்ற திரைப்படத்தில் தன்னுடைய முழு நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தினார்.

அந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது நடிக்க தெரியாது என கலாய்த்த அனைவரையும் வாயையும் மூட வைத்தார். நடிகை கீர்த்தி சுரேஷ் ஆரம்பத்திலிருந்தே குடும்ப பாங்கான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி இருக்கும் வகையில் மகேஷ்பாபு திரைப்படத்தின் நீச்சல் உடையில் நடிக்க போவதாக  தகவல் கிடைத்தது இதுகுறித்து அவரிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் கேள்வி எழுப்பப்பட்டது.

keerthi suresh
keerthi suresh

அதற்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ் நீச்சல் உடையில் எப்பொழுதும் நான் நடிக்க மாட்டேன்.  அப்படி வெளியாகும் செய்திகள் தவறானது என்று யாரும் நம்ப வேண்டாம் என தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினார்.